தேர்தலில் தானும் போட்டி..!! விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா திட்டவட்டம்..!!
தேர்தலில் தானும் போட்டியிடுவேன் என பிரேமலதா விஜயகாந்த் உறுதிப்பட தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. கடந்த சில நாட்களாகவே விரைவில் கூட்டணி அறிவிப்பு வெளியிடுவேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறி வந்தார். ராஜ்ய சபா சீட் வழங்காததால் தேமுதிக அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, எல். கே.சுதீஷ் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பின்போது போது உடன் இருந்தனர்.
முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்பு இது நடந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். முதல்வர் ஸ்டாலின் தேமுதிக கட்சியை வரவேற்றார். கூட்டணி உறுதியாகிய நிலையில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: நல்வரவு..!! திமுகவுடன் தேமுதிக கூட்டணி... முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு..!!
பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சட்டப்பேரவை தேர்தலில் தானும் போட்டியிடப் போவதாக அறிவித்தார். 234 தொகுதிகளும் தேமுதிகவின் களம் தான் என்று பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்தார். அனைவரும் தோழமைக் கட்சிகள் தான் என்றும் திமுக கூட்டணியில் இணைந்தது தொடர்பாக தெரிவித்தார். பலரின் கற்பனைகளுக்கும் தேமுதிக இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்று கூறினார்.
இதையும் படிங்க: எப்போது கூட்டணி அறிவிப்பு... யாருடன் கூட்டணி...! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!