×
 

முகமூடி நபர் யார்? ... விஜயை விடாமல் விரட்டும் பிரேமலதா விஜயகாந்த்... திமுகவுக்கே டப் கொடுக்கும் தேமுதிக...!

'முகத்தை மூடிக்கொண்டு வந்தவர் யார்?’என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்து வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

இரு தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் மீது பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “" தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததாக கூறுவது மனவேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டு வரலாற்றில் நடக்காத விஷயம். அதனை நினைத்து நான் மனவேதனை அடைகிறேன்." என்றார். தொடர்ந்து பேசிய அவர் "முதல்வரைச் சந்திக்க யார் முகமூடி அணிந்து வந்தார் எனத் தெரிவிக்க வேண்டும். அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் அதைவிட தலைகுனிவு இருக்க முடியாது” என்றும் விளாசினார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், இந்த அரசு குதிரை பேரம் நடத்தும் அரசு இல்லை... குதிரை வேகத்தில் செயல்படக்கூடிய அரசு என விளக்கமளித்திருந்தார். பிரேமலதா பேசியது இன்று வரை ஹாட் டாப்பிக்காக சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு சென்றது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியா? அல்லது அமமுக எம்.எல்.ஏ. காமராஜா? என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது. 

இந்நிலையில், சட்டப்பேரவையில் குதிரை பேரம் குறித்து விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டிற்கு வந்தது யார் என்பது பற்றி வாய் திறக்கவில்லை. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள பிரேமலதா விஜயகாந்த், 'முகத்தை மூடிக்கொண்டு வந்தவர் யார்?’என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்து வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: “பிரேமலதாவை ஃபினிஷ் பண்ணிடுவோம்”... வாக்காளர்கள் மத்தியில் ஸ்ரீதர் வாண்டையார் சர்ச்சை பேச்சு...!

மறைமுக அரசியல் அல்ல, வெளிப்படையான ஆதரவே மக்களின் நம்பிக்கை எனக்குறிப்பிட்டுள்ள பிரேமலதா விஜயகாந்த், தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதலமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் எனக்கூறியுள்ளார். மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி சேர்ந்தவர்கள் எவ்வாறு 'நிபந்தனை இல்லாத ஆதரவு' என்று வெளிப்படையாக தெரிவித்தார்களோ, அதேபோல் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்களும் தங்களின் ஆதரவை எந்த நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் குதிரைப் பேரம் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள். மேலும், 'முகத்தை மூடிக்கொண்டு வந்தவர் யார்?’என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு, அதற்கு பின்பு எந்தவிதமான குதிரை பேரமும் நடக்கவில்லை என்பதையும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார். 
 

இதையும் படிங்க: மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share