×
 

களையெடுக்க ஆரம்பித்த விஜய்... திமுகவிற்கு அடுத்த பேரதிர்ச்சி... பி.டி. அரசகுமார் விவகாரத்தில் அதிரடி...!

இந்த மோசடி வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள பி.டி. அரசுகுமார் மீது மேலும் புகார்கள் இருந்தால் அளிக்குமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அரசு அங்கீகாரம், டிடிசிபி அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், பி.டி. அரசுகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், அவரால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி நிர்வாகங்கள் தத்தமது காவல் நிலையங்கள் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் அளிக்குமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சம்பிரதாய மாநாடா? சாதனை படைக்கும் மாநாடா?... விடிந்ததுமே விஜயை சீண்டிய ஆர்.பி.உதயகுமார்...!

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில், பதிவு செய்யப்படாத "தமிழ்நாடு பிரைவேட் ஸ்கூல்ஸ் அசோசியேஷன்" என்ற அமைப்பின் தலைவராக பி.டி. அரசுகுமார் செயல்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து நிரந்தர அரசு அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, டிடிசிபி அனுமதி, கட்டிட அனுமதி, கல்வி உரிமைச் சட்டம் (RTE) தொடர்பான அனுமதிகள் மற்றும் இதர அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், பி.டி. அரசுகுமாரை கடந்த 27ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பலரிடமிருந்து பணம் பெற்று அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்ததும், பெற்ற பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றியதும் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகங்களிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் முழுமையான விவரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டையைச் சேர்ந்த தியாகராஜன் அரசுகுமார் என்ற பி.டி. அரசுகுமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடி வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள், தாங்கள் உள்ள மாவட்டங்களின் காவல் நிலையங்கள் அல்லது காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் அளிக்குமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: MLA பதவியை ராஜினாமா செய்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? அதிமுகவில் அடுத்த விக்கெட்! அடித்து ஆடும் CM விஜய்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share