இரவே குவிந்த புதுவை வாரியர்ஸ்! தொண்டர்களுக்கு N. ஆனந்த் வேண்டுகோள்! நிர்வாகிகள் உற்சாகம்!
புதுச்சேரியில் நாளைக் காலை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கும் நிலையில், இரவே மைதானத்தில் குவிந்த தொண்டர்களிடத்தில் தவெக பொதுச்செயலாளர் நாளை வாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திற்கு, கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே, அதாவது நேற்றிரவே, மைதானத்தில் குவியத் தொடங்கினர். புதுச்சேரியின் 'வாரியர்ஸ்' என்று தொண்டர்களை வர்ணிக்கும் அளவுக்கு அவர்களின் ஆர்வம் அதிகமாக இருந்தது.
இரவு நேரத்திலும் பெருமளவில் திரண்ட தொண்டர்களைப் பார்த்து, கட்சியின் முக்கிய நிர்வாகியான டி.வி.கே. ஆனந்த் அவர்களை மேடையிலிருந்து சந்தித்து உரையாடினார்.
மைதானத்தில் கூடியிருந்த தொண்டர்களை நோக்கி தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் பேசியதாவது: "உங்களுக்கான இடம் ரெடி பண்ணியாச்சு, ரெடி பண்ணியாச்சு! காலையில் நீங்கள் தயவு செய்து எல்லாரும் வந்தீங்கன்னா போதும். இப்பொழுது எல்லாரும் நீங்க கிளம்புங்க, தயவு செய்து. ஏன்னா, இங்க மைக் எல்லாமே டெஸ்ட் பண்ணனும். அதனால அவங்களுக்கு (தொழில்நுட்பக் குழுவினருக்கு) வந்து சிரமமாக இருக்குன்னு சொல்றாங்க. அதனால தயவு செஞ்சு நீங்க கிளம்புங்க. அண்டியை எடுப்பா... பிரண்ட்ல நிக்கிறவங்க வெளிய போங்க, அப்பதான் எல்லாரும் போக சரியா இருக்கும்."
இதையும் படிங்க: புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்: "ஒரு பாசுக்கு ஒருவர் மட்டுமே!" – காவல்துறை எச்சரிக்கை
இவ்வாறு பேசிய அவர், மைக்கில் ஒலிச் சோதனை மற்றும் இதர ஏற்பாடுகள் நடக்க வேண்டி இருப்பதால், தொண்டர்கள் அனைவரும் தற்போது கலைந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
நாளை 10.30 மணி அளவில் பொதுக்கூட்டம் நடக்கவிருக்கும் நிலையில், இரவே திரண்ட தொண்டர்களின் இந்த உற்சாகம் கட்சி நிர்வாகிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இருப்பினும், பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளின் நலன் கருதி, டி.வி.கே. ஆனந்த் முன்நின்று, மைதானத்தின் முன்பகுதியில் நின்றிருந்த தொண்டர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி, அவர்களை அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைத்தார். தொண்டர்களின் இந்த எழுச்சி, பொதுக்கூட்டம் மிகுந்த வெற்றியடையும் என்ற நம்பிக்கையைக் கட்சி நிர்வாகிகளிடம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: தவெக-வில் இணையும் நிகழ்வு: கோபிச்செட்டிபாளையத்தில் ஒரே நாளில் 1000+ உறுப்பினர்கள் சாரை சாரையாக வருகை!