×
 

பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

பாஜவில் இணைந்த அதிருப்தி எம்பி ராகவ் சத்தாவின் கட்டுப்பாட்டில் பஞ்சாப்பின் 63 எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எந்நேரமும் அங்கு ஆம்ஆத்மி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு எந்நேரமும் கவிழும் அபாயத்தில் உள்ளது. முன்னாள் ஆம் ஆத்மி தலைவரும், ராஜ்ய சபா எம்.பி.யுமான ராகவ் சத்தா பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் மீது ஏற்பட்ட கடும் அதிருப்தியால், ராகவ் சத்தா உள்ளிட்ட 7 ராஜ்ய சபா எம்.பி.க்கள் சமீபத்தில் கட்சியிலிருந்து விலகினர். அதைத் தொடர்ந்து ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல் உள்ளிட்டோர் பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்கரியின் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இந்த நகர்வு தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராகவ் சத்தா பஞ்சாபிலிருந்து ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது விலகல் ஆம் ஆத்மி கட்சியின் பலத்தை பெரிதும் பாதித்துள்ளது. ராஜ்ய சபாவில் 10 ஆக இருந்த ஆம் ஆத்மியின் எம்.பி. பலம் இப்போது 3 ஆகக் குறைந்துவிட்டது.

இதையும் படிங்க: நெல் சேமிப்பு கிடங்கில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்..! போலீஸ் விசாரணை..!

பஞ்சாப் சட்டசபையில் 117 உறுப்பினர்களில் 92 எம்.எல்.ஏ.க்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வருகிறது. இந்த 92 பேரில் 63 பேர் ராகவ் சத்தாவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தால் ஆம் ஆத்மி அரசு உடனடியாக கவிழும் அபாயம் உள்ளது.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். “சரத் பவார், சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளில் பயன்படுத்தப்பட்ட அதே ‘வாஷிங் மெஷின்’ இப்போது பஞ்சாபிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாஜகவில் இணைந்த துரோகிகள் பஞ்சாப்பை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள்” என்று அவர் காட்டமாகக் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த சூழலில் அதிர்ச்சியில் உள்ளனர். எந்நேரமும் ஆட்சி கவிழும் அபாயம் நிலவுவதாக அவர்கள் கருதுகின்றனர். பஞ்சாப் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் பூசல் தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா போரில் இதுவரை இந்தியர்கள் 10 பேர் பலி! சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share