×
 
☰

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை காப்பி அடிக்கிறதா காங்கிரஸ்? கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள்! டெல்லியில் பரபரப்பு!

போலீசார் தடுப்புகளை அமைத்து பேரணியை தடுத்ததுடன், பல எதிர்க்கட்சித் தலைவர்களை காவலில் எடுத்தனர். ராகுல் காந்தியும் தடுப்புகளைத் தாண்டி போராட்டத்தைத் தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் போராட்டத்தில் பங்கேற்றிருப்பது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: விஜய்க்கு பயந்துதான் ராகுல் மவுனமா? தமிழக எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் திமுக புதிய கேள்வி!

அந்தப் போராட்டத்தின் பின்னணியில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டனர்.

தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அக்டோபர் 6-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.

போலீசார் தடுப்புகளை அமைத்து பேரணியை தடுத்ததுடன், பல எதிர்க்கட்சித் தலைவர்களை காவலில் எடுத்தனர். ராகுல் காந்தியும் தடுப்புகளைத் தாண்டி போராட்டத்தைத் தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த இரு சம்பவங்களையும் ஒப்பிட்டு, காங்கிரஸ் கட்சி புதியதாக உருவானதாகக் கூறப்படும் “கரப்பான் கட்சி” முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு பின்னால் சென்று கொண்டிருப்பதாக சில அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக போராட்டங்கள் தீவிரமடையும் நேரங்களில் ராகுல் காந்தி அதில் நேரடியாக பங்கேற்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதன் மூலம் நீண்ட கால அரசியல் வரலாறு கொண்ட காங்கிரஸ், புதிய அரசியல் இயக்கங்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்கின்றனர். “காங்கிரஸ் அடுத்து நடத்தப்போகும் போராட்டம் எது என்பதை, முதலில் அந்த இயக்கத்தினரிடமே கேட்க வேண்டிய நிலை வந்துவிட்டதா?” என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.

எனினும், தேர்தல் நடைமுறைகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான தங்களது எதிர்ப்பை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்தவே இந்தப் போராட்டங்களை நடத்துவதாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றன.

இதையும் படிங்க: ராகுலும், சோனியாவும் வாக்குத் திருட்டால் எம்.பி.க்கள் ஆனார்களா? தேர்தல் கமிஷன் விவகாரம்! பாஜக கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share