ராகுல்காந்திக்கு பயம்?! ரயில்வே அமைச்சர் மீது சந்தேகம்! ரயிலை தவிர்த்து விமானத்தில் பறந்தார்!
டெல்லியிலிருந்து கோட்டாவிற்கு செல்வதற்கு இரவு நேர ரயிலில் பயணிக்க விரும்பினார் ராகுல். அவருக்கு டிக்கெட், 'புக்' செய்யப்பட்டு விட்டது.
ராஜஸ்தானின் கோட்டா நகரில் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் கல்வி தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட பயணம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. ரயிலில் செல்ல திட்டமிட்டிருந்த அவர், கடைசி நேரத்தில் அந்த திட்டத்தை மாற்றி தனி விமானத்தில் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அளவில் நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களால் புகழ்பெற்ற நகரமாக கோட்டா அறியப்படுகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் அங்கு பயிற்சி பெற்று வருவதால், கல்வி மற்றும் மாணவர்களின் மனஅழுத்தம் குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார்.
அந்த நிகழ்ச்சிக்காக டெல்லியில் இருந்து இரவு நேர ரயிலில் கோட்டாவுக்கு செல்ல முதலில் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கான டிக்கெட்டும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவருடன் செல்ல இருந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு டிக்கெட் கிடைக்காததால், அவர்கள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டுவை அணுகி உதவி கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ராகுல்காந்தி ஆசீர்வாதத்துடன் காங்., செய்த கழுத்தறுப்புகள்! மீண்டும் சீண்டும் திமுக! விஜயன் பதிலடி!
அப்போது, ராகுல் காந்தி எந்த ரயிலில் பயணம் செய்ய உள்ளார் என்பது உள்ளிட்ட தகவல்கள் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு டிக்கெட் ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் ராகுல் காந்திக்கு தெரியவந்ததும், தனது ரயில் டிக்கெட்டை ரத்து செய்யுமாறு அவர் கூறியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பயண விவரங்கள் முன்கூட்டியே தெரிந்துவிட்டதால், பயணத்தில் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், தனி விமானம் மூலம் கோட்டாவுக்கு செல்ல அவர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
கோட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, தற்போதைய கல்வி முறை மாணவர்களுக்கு அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும், அதில் மாற்றம் தேவை என்றும் வலியுறுத்தினார். இதற்கிடையில், அவரது பயண திட்டத்தில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம் தேசிய அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. எனினும், இந்த தகவல்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: அல்வா மாதிரி வந்த வாய்ப்பு வீண்! ராஜ்யசபா சீட் அம்போ! காங்., உட்கட்சி பூசலால் ராகுல்காந்தி அப்செட்!