×
 

பெண்களுக்கு இலவச பஸ்!! மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000!! கேரளத்தில் ராகுல்காந்தி வாக்குறுதி!

கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார்.

கோழிக்கோடு: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று வாக்குறுதி அளித்துள்ளார்.

கேரளாவில் ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இன்று கோழிக்கோட்டில் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, பெண்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

ராகுல் காந்தி கூறுகையில், “கேரள பெண்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் நாங்கள் பாதுகாக்கப் போகிறோம். யுடிஎஃப் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள் அனைவரும் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம். கல்லூரி செல்லும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் தலா ₹1,000 உதவித் தொகை வழங்கப்படும். 

இதையும் படிங்க: காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் மோடி!! ராகுல்காந்திக்கு பெரும் சவால்!! பிரதமர் கேரள பயணத்தில் ட்விஸ்ட்!

முதியோருக்கு ஓய்வூதியம் ₹3,000 ஆக உயர்த்தப்படும். இதற்கென தனி அமைச்சகம் உருவாக்கப்படும். இளைஞர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடனாக ₹5 லட்சம் வரை வழங்கப்படும். உம்மன் சாண்டி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ₹25 லட்சம் வரை காப்பீடு அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு ஏற்கெனவே அமல்படுத்தி வரும் ‘மகளிர் உரிமைத் தொகை’ உள்ளிட்ட பெண்கள் நலத் திட்டங்களைப் போன்றே கேரளாவிலும் பெண்களுக்கான சலுகைகளை அறிவித்துள்ளார் ராகுல். இந்த அறிவிப்புகள் கேரள பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் நிலையில், ராகுல் காந்தி யுடிஎஃப் வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று கோழிக்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி அவர் பேசினார்.

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ராகுல் வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் அமலில் உள்ள இலவச பேருந்து பயணத் திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தை மாதிரியாகக் கொண்டே கேரளாவிலும் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த உறுதி பூண்டுள்ளதாக அவர் கூறினார்.

ஏப்ரல் 9 அன்று நடைபெறும் கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த வாக்குறுதிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: ராகுல்காந்தியின் பிரசார பயணம் திடீர் ரத்து! கேரளம் செல்கிறார் கார்கே!! காங்கிரசார் ஏமாற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share