விஜய் ஆரம்பித்து வைத்த கோஷம்!! காங்., விடாப்பிடி! திமுக, கனிமொழியிடம் ராகுல்காந்தி பேரம்!!
திமுக- காங்கிரஸ் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்த போது அவர் என்ன வலியுறுத்தினார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த பல தேர்தல்களில் திமுகவுடன் கைகோர்த்து வந்த காங்கிரஸ், இம்முறை அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கோரி வருகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் இம்முறை அதிக தொகுதிகள் கேட்கும் முடிவுக்கு காங்கிரஸ் வந்துள்ளது. ஆட்சியில் பங்கு கோரிக்கையும் வலுத்து வருகிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கருணாநிதியின் கொள்கையை மீறி காங்கிரஸ் ஆட்சி பங்கு கேட்பது திமுக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுவெளியில் தொடர்ந்து பேசி வருவதும் திமுகவை எரிச்சலடையச் செய்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்துக்காக டெல்லி சென்ற கனிமொழி எம்.பி., காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சுனேரி பாக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து 20 நிமிடங்கள் பேசினார்.
இதையும் படிங்க: ராகுல்காந்தியை பாக்க மூஞ்சியை மூடிக்கிட்டு போனேனா? இபிஎஸ்-ஐ சீண்டும் கனிமொழி! தேமுதிக கூட்டணி?
அப்போது ராகுல் காந்தி கனிமொழியிடம், "இம்முறை காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு, 41 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட்கள், உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத இடங்கள் வேண்டும்" என்று வலியுறுத்தினார். அதிமுக கூட்டணியில் பாஜக 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதால், அதற்கு இணையாக காங்கிரஸுக்கும் தர வேண்டும் என்றும் கூறினாராம்.
இதை கேட்டு அதிர்ந்த கனிமொழி, "தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது இதுவரை நடந்ததில்லை. இப்போது எதிர்பார்க்க முடியாது. 41 தொகுதிகள் என்பது மிக அதிகம். கடந்த முறை 25 கொடுத்தோம், இம்முறை 27 ஆகலாம். ராஜ்யசபா சீட், உள்ளாட்சி இடங்கள் போன்றவற்றை நான் முடிவு செய்ய முடியாது. தலைவர் ஸ்டாலின் ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை" என்று பதிலளித்தாராம்.
இதன்பிறகு கனிமொழி செய்தியாளர்களிடம், "திமுக-காங்கிரஸ் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது. புதிய கட்சிகளும் கூட்டணியில் இணைகின்றன" என்று கூறினார். ஆனால் திமுக கூட்டணி ஏற்கனவே பல கட்சிகளால் நிரம்பியுள்ள நிலையில், புதிய கட்சிகள் இணைவதாக கூறியது காங்கிரஸ் வெளியேறும் சூழலை உருவாக்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக-காங்கிரஸ் இடையேயான இந்த மோதல் தேர்தல் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி உறுதியாகுமா அல்லது பிரிவா என்பது விரைவில் தெரியவரும்.
இதையும் படிங்க: ராகுல்காந்தியுடன் போனில் பேசிய மு.க.ஸ்டாலின்!! கனிமொழி சந்திப்பின் போது காங்., நிர்வாகி மீது புகார்!!