×
 

சுதந்திரமாக பேச வாய்ப்பு வேண்டும்!! பார்லி.,-யை கலக்கிய ராகுல்காந்தி ஸ்பீச்!

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவையில் சுதந்திரமாக பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக பேசினார். அவையில் சுதந்திரமாக பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்ற இரண்டு முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கினார்.

ராகுல் காந்தி கூறியதாவது: “நாம் எரிசக்தி மற்றும் பொருளாதாரத்தை ஆயுதமாக பயன்படுத்தும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவின் உண்மையான வலிமை 140 கோடி மக்கள்தான். முன்பு இருந்த உணவு பொருட்கள் தட்டுப்பாடு இப்போது இல்லை. ஆனால் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. உலகம் பதற்றமான நிலையில் உள்ளது. போர்கள் நடக்கின்றன. அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) காலம் வந்துவிட்டது.”

அவர் மேலும் கூறினார்: “பாகிஸ்தான் ராணுவத் தளபதியை காலை உணவுக்கு அழைத்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உபசரித்தார். ஆனால் இந்திய அரசு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அமெரிக்காவுக்கு இந்தியாவின் தரவுகள் மிக முக்கியம். நமது மக்கள், தரவுகள், உணவு உற்பத்தி திறன், எரிசக்தி ஆகியவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரவுகள் குறித்து பேசியிருக்க வேண்டும். தரவுகள் பற்றி பேசியிருந்தால் அமெரிக்காவுக்கு சமமாக அமர்ந்து பேசியிருக்கலாம்.”

இதையும் படிங்க: திமுக அமைச்சர்களுக்கு அண்ணாதுரையை தெரியாது! விஜயிடம் என்ஜினே இல்லை!! அதிரடி காட்டிய அண்ணாமலை!

ராகுல் காந்தி தொடர்ந்து கூறியதாவது: “தரவுகள் நாட்டை வல்லரசாக மாற்றும். அமெரிக்க டாலரை காக்க இந்திய தரவுகள் தேவைப்படுகின்றன. தங்கம், வெள்ளி விலை உயர்வு, டாலர் மதிப்பு சரிவு, சர்வதேச பதற்ற நிலை ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.”

ராகுல் காந்தியின் இந்த உரை மக்களவையில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்தியாவின் தரவு பாதுகாப்பு, உலக அரசியலில் இந்தியாவின் நிலை, பொருளாதார சவால்கள் ஆகியவை குறித்து அவர் எழுப்பிய கேள்விகள் எதிர்க்கட்சி வட்டாரங்களில் பெரும் வரவேற்பை பெற்றன. மேலும், அமெரிக்காவுடனான உறவில் இந்தியா சமமான நிலையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற அவரது கோரிக்கை சர்வதேச அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவரின் இந்த தாக்குதல் ஆளும் கட்சியினரை கடுமையாக விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தது. தரவு, எரிசக்தி, உலக பதற்றம் ஆகியவை இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் என்பதை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்த உரை தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதையும் படிங்க: எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share