×
 

'Blast-uh Blast-uh' புதுச்சேரி, கேரளாவிலும் தவெக + காங்., கூட்டணி!! விஜய்க்கு ராகுல்காந்தி கொடுத்த பெரிய ஆஃபர்!!

புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கும் விஜய்க்கு செல்வாக்கு உள்ளது.

சென்னை: 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் பெரும் பிளவு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. திமுகவுடன் 25 சீட் மட்டுமே ஒதுக்கீடு என்று பேச்சு நடக்கும் நிலையில், காங்கிரஸ் தேசியத் தலைமை திடீரென விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி பேச்சை தொடங்கியுள்ளது. 

ராகுல் காந்தியின் மிக முக்கியமான வியூகவாதியும், காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறை தேசியத் தலைவருமான பிரவீன் சக்ரவர்த்தி, பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இம்முறை 39 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் கேட்டு உறுதியாக இருக்கிறது. கடந்த தேர்தலில் 25 சீட் வழங்கப்பட்டது. அதே அளவு தான் இம்முறையும் என்று திமுக கூறுகிறது. இதை காங்கிரஸ் தேசியத் தலைமை ஏற்கவில்லை. இதனால் தான் ராகுல் காந்தி தனது மிக நம்பிக்கைக்குரிய வியூகவாதி பிரவீனை விஜயிடம் அனுப்பி வைத்தார். 

இதையும் படிங்க: 100 வருஷ கோயிலை இடிச்சிருக்கேன்! ஓட்டு எப்பிடி வரவழைக்கிறதுனு தெரியும்! வைரலாகும் டி.ஆர்.பாலு வீடியோ!!

பேச்சுவார்த்தையில், “தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி அமைத்தால் 60 தொகுதிகள் தர தயார். நீங்கள் தேர்வு செய்யும் 125 தொகுதிகளின் லிஸ்ட்டை கொடுத்துள்ளோம். அதில் இருந்து 60 தொகுதிகளை தேர்வு செய்யுங்கள்” என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு ஒரு பெரிய கண்டிஷன் போடப்பட்டுள்ளது. புதுச்சேரி, கேரளாவிலும் 2026-ல் சட்டசபைத் தேர்தல் வருகிறது. அங்கு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க விஜய் உதவி செய்ய வேண்டும். விஜய் பிரசாரம் செய்தால் கிறிஸ்தவர், மீனவர் ஓட்டுகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் கணக்கு போடுகிறது. அதற்கு ஈடாக தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி முறிந்தாலும் பரவாயில்லை என்று ராகுல் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தவெக வட்டாரம் கூறுகையில், “திமுக கூட்டணியில் காங்கிரஸ் 30 சீட் ஜெயித்தாலும் ஆட்சியில் பங்கு கிடைக்காது. ஆனால் புதுச்சேரி, கேரளாவில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைத்தால், விஜய்க்கு மறைமுக செல்வாக்கு கிடைக்கும். இதைத்தான் ராகுல் பயன்படுத்த நினைக்கிறார்” என்று தெரிவித்தது. விஜய் இதுவரை கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை என்றாலும், இந்த சந்திப்பு திமுகவுக்கு பெரும் அழுத்தமாக அமைந்துள்ளது.

திமுக தரப்பில் இதை “பழைய டெக்னிக்” என்று கூறி சிரிக்கிறது. ஆனால் காங்கிரஸ் உயர்மட்டத்தில் “தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி முறிந்தாலும், புதுச்சேரி-கேரளாவில் ஆட்சி அமைத்து விஜயை கூட்டணியில் சேர்த்தால் ராகுலுக்கு பெரிய வெற்றி” என்று பேசப்படுகிறது. இந்த ரகசிய சந்திப்பு, 2026 தேர்தலுக்கு முன் தமிழக அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: ஓட்டு அரசியலுக்காக தாஜா செய்யும் திமுக!! வழிபாட்டு உரிமையை பறிக்குது!! பார்லி.,-யில் அனல் பறக்கும் விவாதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share