அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!
சென்னையில் நடிகர் ரஜினியை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று சந்தித்து பேசினார்.
சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'வீ தி லீடர்ஸ்' என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கினார். அப்போது ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால் ரஜினி தனது இயக்கத்துக்கு ஆதரவு தருவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ரஜினியின் தலைமை ரசிகர் மன்றம், “ரஜினியின் பெயர் அல்லது படத்தை எந்தக் கட்சியும், அமைப்பும் பயன்படுத்தக் கூடாது” என தெளிவாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர முயற்சி எடுத்து வருகிறார். கடந்த வாரம் டெல்லியில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அமித் ஷா, இதற்கான திட்டங்களை வகுத்திருந்தார். இந்தச் சூழலில் நயினார் நாகேந்திரன், மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில செயலர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் ரஜினியை நேரில் சந்தித்தனர்.
இதையும் படிங்க: விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!
சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் சிறப்பு நூல்களை ரஜினிகாந்துக்கு அவர்கள் வழங்கினர். பாஜகவுக்கு ரஜினியின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. பிரதமரின் சாதனைகளை ரஜினி அவர்களுக்கு எடுத்துரைத்தோம்” எனக் கூறினார்.
ரஜினிகாந்த் அரசியல் களத்தில் இறங்குவாரா அல்லது எந்த அரசியல் அமைப்புக்கும் ஆதரவு தெரிவிப்பாரா என்பது குறித்து தொடர்ந்து ஊகங்கள் நிலவி வருகின்றன. தமிழக அரசியலில் ரஜினியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட அரசியல் சமன்பாடுகள் மாறக்கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இதையும் படிங்க: BreakingNews! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை?! ஜூன் 15ல் தனிக்கட்சி!? பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டி? கசிந்தது மூவ்?