ஸ்டாலின் தான் 2G ஊழலுக்கு காரணம் - குண்டைத் தூக்கிப்போட்ட ஆ. ராசா... பகீர் கிளப்பும் ஆடியோ லீக்...!
நான் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கழித்து கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டபோது திமுகா திமுகாவினர் ஒட்டுமொத்த பேரும் திரண்டு வந்து பார்த்தது தனக்கு எந்த அளவிற்கு ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கும் எனக்கூறியிருக்கிறார்.
2ஜி ஊழலுக்காக சிறையில் இருந்தபோது திமுகவினர் யாரும் தன்னை வந்து சந்திக்கவில்லை என திமுக எம்பி ஆ.ராசா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆதரவாளர்களிடம் ஆ.ராசா பேசிய ஆடியோவும் வெளியாகி உள்ளது.
அந்த ஆடியோவில், “திமுகவில் இருந்து ஒரு எம்எல்ஏ வந்திருப்பாங்களா?, ஒரு எம்பி வந்திருப்பாங்களா? ஒரு கட்சிக்காரங்க வந்திருப்பாங்களா? நான் உள்ள போய் ரெண்டு மாசம் கழிச்சு கனிமொழி உள்ள வருது. அதுவரைக்கும் எத்தனை பேர் வந்து என்னை பார்த்தார்கள். என் மனநிலைமை ஜெயிலுக்குள்ள எப்படி இருந்துருக்கும்? என் வீட்டுல ஏதாவது எடுத்தார்களா? கலைஞர் டிவிக்கு தான் போச்சு பணம்? அதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பல. என் வீட்டுல ஏதாவது சிபிஐ எடுத்தானா? யாரு என்னை பாக்க வந்தீங்களா? கனிமொழி சிறைக்கு வந்த பிறகு படையெடுத்து அனைத்து அமைச்சர்களும் வந்தாங்க.
எனக்கு தெரியாதா? ஆனா அந்த ரெண்டு மாசத்துல என்னுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்? நான் பஸ்ட் ஆகியிருந்தா என்ன ஆயிருக்கும்?. கனிமொழி அரெஸ்ட் ஆன பிறகு அழகிரி ஒரு நாள் வராரு, வந்து கலைஞர் டி.விக்கு எல்லாத்தையும் வாங்கி கொடுத்தது ஸ்டாலினாமே. நீயும் கனிமொழியும் எதுக்கு ஜெயில்ல இருக்கீங்க. ஸ்டாலின் தான் செஞ்சாருன்னு சொல்லி அப்ரூவர் ஆகி வெளிய வர வேண்டியது தானே எனக்கூறியதாக பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி: அடுத்த வரி குறைப்பில் இறங்கிய மத்திய அரசு..!! இதுக்கு ஜீரோ வரியாம்..!!
ஆ. ராசா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பேசிய இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதாவது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ ராசா 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததன் மூலம் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஆ ராசா, தற்போதைய திமுகா எம்பியாக இருக்கக்கூடிய கனிமொழி உள்ளிட்ட பலர் மீது டெல்லி சிபிஐ போலீசார் இரண்டு வழக்குகளையும், அமலாக்கத்ததுறை ஒரு வழக்கையும் பதிவு செய்திருந்தார்கள்.
இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உட்பட பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் 2017ஆம் ஆண்டு விடுதலை செய்து தீர்ப்பளித்தார். அதனை எதிர்த்து தொடரப்பட்டிருக்கக்கூடிய அந்த வழக்கிலுடைய விசாரணையும் மனுவுக்கு ஏற்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கருணாநிதி உயிரோடு இருக்கும் காலத்திலேயே ஆராசா தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் பேசி இருக்கக்கூடிய ஒரு ஆடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் 2ஜி வழக்கில் நான் சிறையில் இருந்தபோது தன்னை யாராவது வந்து பார்த்தார்களா? திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ, மூத்த நிர்வாகியோ யாருமே வந்து என்னை பார்க்காத நிலையில் எனக்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டபோது திமுகா திமுகாவினர் ஒட்டுமொத்த பேரும் திரண்டு வந்து பார்த்தது தனக்கு எந்த அளவிற்கு ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கும் எனக்கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: உயிர் நண்பர்களை மோத விட்ட உதயநிதி ஸ்டாலின்!! கார்த்திக் - ஆதவ் அர்ஜூனாவுக்கு போட்ட தரமான ஸ்கெட்ச்!!