நாட்டின் நலனில் மோடி சமரசம்?! பார்லி.,யில் அனல் பறக்கும் விவாதம்!! ராகுல்காந்திக்கு ரவிசங்கர் பிரசாத் பதிலடி!
நாட்டின் நலன்களில் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக ராகுல் கூறுவது அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளாகும். பிரதமர் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்,' என்று பாஜ எம்பி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
டெல்லி: லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கக் கோரும் எதிர்க்கட்சியின் தீர்மானம் மீதான விவாதம் கடும் வார்த்தைப் போராக மாறியுள்ளது. இதில் பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆவேசமாக பதிலடி கொடுத்தார்.
ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் நலன்களில் சமரசம் செய்துவிட்டார் என்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலாக ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், "நாட்டின் நலன்களில் பிரதமர் மோடி சமரசம் செய்துவிட்டார் என்ற ராகுலின் கூற்று அடிப்படை ஆதாரமற்றது. பிரதமர் ஒருபோதும் எதற்காகவும் சமரசம் செய்ய மாட்டார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்று உறுதியாகத் தெரிவித்தார்.
மேலும், "தனிப்பட்ட அரசியல் மோதல்களுக்காக பாராளுமன்றத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம். சபாநாயகருக்கு எதிரான இந்தத் தீர்மானம் சில தலைவர்கள் அல்லது குழுக்களின் கர்வத்தை திருப்திப்படுத்துவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது" என்று கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!
கடந்த காலங்களில் 11 எம்பிக்கள் கேள்வி கேட்க பணம் வாங்கியதற்காக நீக்கப்பட்டனர், மிளகாய்த் தூள் தூவப்பட்டது போன்ற சம்பவங்கள் நடந்தபோதும், தற்போது நடக்கும் இத்தகைய நாடகப் போராட்டங்களை தான் இதுவரை பார்த்ததில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விவாதம் ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தால் தொடங்கியது. எதிர்க்கட்சி எம்பிக்கள் சபாநாயகர் பக்கபலமாக செயல்படுவதாகவும், ராகுல் காந்தியை பேச விடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டினர். ஆனால் ஆளும் கட்சி தரப்பில் இதை கடுமையாக மறுத்து, சபாநாயகரை பாதுகாத்தனர். ராகுல் காந்தி தனது பேச்சில், பலமுறை தடுக்கப்பட்டதாகவும், பிரதமர் சமரசம் செய்தது குறித்து பேச முயன்றதாகவும் கூறினார்.
இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளும் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விவாதம் தொடர்ந்து நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது போன்ற மோதல்கள் ஜனநாயகத்தின் வலிமையை காட்டுவதாக சிலர் கருதினாலும், பாராளுமன்ற நடைமுறைகளை பாதிக்கும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: புதிய பாதையில் காங்கிரஸ்? ஹைதராபாத்தில் ராகுல் காந்தி - ஆதவ்... வலுக்கும் சந்தேகம்..!!