பனையூர் டு கோட்டை வரை அணி அணியாக அந்து கிடக்கும் தவெக... முக்கிய பாயிண்ட்டை பிடித்த ஆர்.பி.உதயகுமார்...!
அமைச்சர்கள் அணி , அதிகாரிகள் அணி , அகதிகள் அணி, முதலமைச்சர் ஆலோசகர் அணி இவைகளால் அனைத்து துறைகளும் முடக்கமாக உள்ளது
அதிகாரிகள் நியமனத்தில் தமிழக அதிகாரிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு
நடைபெற்றுக் கொண்டிருக்கிற விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சியிலே, யாருமே நிம்மதியாக இல்லை. ஆட்சியாளர்களும்,மக்களும்அரசு ஊழியர்களும் ,விவசாயிகளும் மாணவர்களும் ஏன், ஆட்சி கட்டில் அமர்த்திய ஜென்சி தலைமுறையே நிம்மதியாக இருப்பதாக தெரியவில்லை. ஆட்சி அமைத்த 2 மாதத்திலே ஏன் இந்த ஒப்பாரி என்று யாரும் கேட்கக்கூடாது.
எல்லோரும் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், இந்த 75 நாட்களிலே ஒருவித பதட்டத்தோடு தான் வாழ வேண்டிய சூழ்நிலை நமக்கு உருவாகி இருக்கிறது.
இதையும் படிங்க: படுத்து ஆய்வு செய்த தவெகவின் மைக் டைசன்... அமைச்சர் ராஜ்மோகனை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!
இன்னும் எத்தனை மாதங்கள் விஜய் தலைமையிலான த.வெ.கஅரசு நிலைத்திருக்கும்? என்று யாராவது உறுதிபட கூற முடியுமா?. ஒரு உறுதியற்ற தன்மை தான் தமிழகத்திலே தற்போது நிலவுகிறது.
பெரும்பான்மைக்கு தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்களை தான் இதுவரை ஆட்சி அமைப்பதற்கு தீர்ப்பளித்த மக்கள், த.வெ.க கட்சிக்கு 108 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும்தான் கொடுத்திருக்கிறார்கள்.
த.வெ.க கட்சி 108 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற காரணத்தினால் ஆட்சி அமைக்கிற பெரும்பான்மை இல்லை என்பதால்., 4 முறை ஆளுநரிடம் அலைந்தது மட்டுமல்ல, பெரும்பான்மை நிருபிப்பதற்காக தேர்தலிலே விசில் சின்னத்தை எதிர்த்து போட்டியிட்ட மற்ற கட்சிகளில் குறிப்பாக கொள்கை மாறுபாடு உள்ள கட்சிகளின் தயவை எதிர்பார்த்து, அவர்களையும் அமைச்சரவையிலே சேர்த்துக்கொண்டு தான், இன்றைக்கு த.வெ.க ஆட்சி அமைத்துள்ளது.
இந்த சூழ்நிலையிலே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கூட்டணி கட்சித் தலைவர்கள் கருத்துகளை வெளியிடுகிறார்கள்.
கூட்டணி கட்சித் தலைவர்கள் யார் விஜய்யை தூக்கிப் பிடிப்பது என்பதிலே போட்டா போட்டி நடைபெறுகிறது .அதில் முதலிடத்தில் யார் வருவது என்பதிவ் திருமாவளவன், வைகோ ஆகியோர் கத்தி கத்தி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் தமிழ்நாட்டுடைய நிலைமை. இது மக்களுக்கு ஒரு பேர் அதிர்ச்சியை தருகிறது.
இது ஒரு புறத்திலே இருந்தாலும் கூட, தேர்தலுக்கு முன்பாக கரூர் பிரச்சாரக் கூட்டத்திலே, விஜய்யை பார்ப்பதற்காக வந்த 41 பேர்கள் உயிரிழந்தபோது, துண்டக்காணோம்,
துணியக்காணோம் என்று ஓடி, அந்த துக்கத்திலே, வேதனையிலே, துன்பத்திலே, துயரத்திலே, கட்சி வேண்டாம், கட்சி அலுவலகம் வேண்டாம் என்று 71 நாட்கள் வீட்டிலே முடங்கிக் கிடந்தது ஒரு நிகழ்வை நாம் கடந்து போனாலும் கூட, அவர் துக்கம் தாங்காமல், அவர் வீட்டிலே முடங்கிவிட்டார் என்று எடுத்துக்கொண்டாலும் கூட, உயிரிழந்தது ஒருவர், இருவர் அல்ல, ஒருவர் உயிரிழந்தாலே அவருக்கு சட்டத்தில் என்ன தண்டனை என்பது அனைவருக்கும் தெரியும்.
ஜென்சி தலைமுறைகளுக்கு வேண்டுமானால், அது திரைப்படக் காட்சியாக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிற அந்த காட்சி இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. ஆனால் அதே கரூருக்கு இப்போது விஜய் முதல்வராக சென்று, வீர வசனம் பேசுகிறார். ஓடு, ஓடு, வர்றான் பாரு, வேட்டைக்காரன் அப்படின்னு சொல்றார். மக்களை வேட்டையாடிய வேட்டைக்காரன் யார்?
41 உயிரை பலி வாங்கிய அந்த வேட்டைக்காரன் யார்? அதற்கு தீர்ப்புதான் இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலே, நீதி அரசர்கள் கமிஷன் அமைத்து, சிபிஐ வழக்கு தொடுத்து, அந்த சிபிஐ வழக்கு இன்றைக்கு தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் சிபிஐ வழக்கின் தீர்ப்பு வெளிவருகிறபோது, தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன அதிர்ச்சி காத்திருக்கிறது என்பது ஆண்டவனுக்கும், நீதி அரசர்களுக்கும் தான் வெளிச்சமாக இருக்கிறது.
முதல்வர் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் அனைவரும் நிர்வாகத்திற்கு புதியவர்களாக இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் அவர்கள் ஆட்சியின் அதிகாரம் என்ன என்று தெரிந்து கொள்வதற்கே மிகவும் சிரமப்படுகிறார்கள். சிலர் நிர்வாகம் புரியாமல், தெரியாமல், எல்லாம் தெரிந்தது மாதிரி செயல்படுவதால், ஏற்படும் குழப்பத்திற்கு தீர்வு காண முடியாமல், மாவட்டம் தோறும், கோட்டை வரை இருக்கிற உயர் அதிகாரிகள் சிக்கி சின்னாபின்னமாகி, அதிர்ச்சியிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். உயர் அதிகாரிகளுடைய நிலையோ, இப்படி இருக்கிறது.
இதைத் தொடர்ந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடைய அதிரடி மாற்றம், சமீபத்திலே கூட 19 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள். முக்கிய துறையிலிருந்து ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள். அதிகாரிகள் மாற்றத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். அது முதலமைச்சரின் விருப்பம், அதிகாரிகளை மாற்றுவதற்கு, அவருக்கு முழு அதிகாரம் இருக்கிறது ஆனால் அந்த கையாளுகிற முறை, ஒரு அரைவேக்காட்டுத் தனமான ஒரு நிர்வாக அணுகுமுறையாக, விஜய் கையாளுகிறார், ஐந்து நாட்களுக்கு ஒரு இடத்திலே போட்டவர்களை திரும்ப ஐந்து நாட்களுக்குள்ளே மாற்றுவது, என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது. குறிப்பாக ஒரு கவலை தரக்கூடிய விஷயம், அந்த நியமனத்திலே தமிழக அதிகாரிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்றைக்கு இந்த த.வெ.க அரசு முடங்கி கிடப்பதற்கு காரணமாக, நாம் அலசி ஆராய்கிறபோது, இது ரெண்டு மாதத்திலே என்ன செய்ய முடியும் என்று கேட்டுவிட்டு யாரும் கடந்து போக முடியாது.
அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த் ஒரு அணியாகவும், ஆதவ் அர்ஜுனா ஒரு அணியாகவும், நிர்மல் குமார் ஒரு அணியாகவும், ராஜ் மோகன் ஒரு அணியாகவும், அதிமுகவிலிருந்து அகதிகளாக சென்றவர்களுக்கு தலைமை தாங்கும் செங்கோட்டையன் ஒரு அணியாகவும், அமைச்சர்களுக்குள் அணி அணியாக அதிகாரப் போட்டியை நடத்திக் கொண்டிருக்கிறதூ அதை மிஞ்சுகிற அளவிலே அரசு உயர் அதிகாரிகளும் உங்களுக்கு சலைத்தவர்கள் என்று நாங்கள் அல்ல என்று தலைமை செயலாளர் தலைமையில் அணியாகவும், முதல்வர்களுடைய நட்பு வட்டாரத்தில் முதல்வர் விஜய்யின் ஆலோசர்கள் அணி என்றும், முதல்வருடைய நலம் விரும்பிகள் அணி என்றும், தனித்தனியாக பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களுக்குள்ளே ஒற்றுமை இல்லை என்கிற நிலையும் வந்திருக்கிறது.. இதனால் ஒட்டுமொத்தமாக சுகாதாரத்துறை, தொழில் துறை, கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலத்துறை, அத்தனை துறைகளும் முடங்கிப் போய் கிடக்கிறது.
இந்த இரண்டு மாதத்திலே எந்த துறையிலும் சாலை போடுவதற்கோ, குடிநீர் வழங்குவதற்கோ, தூய்மைப் பணியை செய்வதற்கோ கூட எந்தவிதமான டெண்டரும், இதுவரை வெளியிடப்பட்டிருக்கிறதா என்றால், அந்த விவரங்கள் வெளிவரவில்லை.
ஆனால் ஆட்சியாளர்கள் அசராமல். அதிரடியாக புதுப்புது ரீல்ஸ்களை வெளியிட்டு, பப்ளிசிட்டி மட்டும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். பப்ளிசிட்டிக்கு மட்டும் குறைவே இல்லை. பாப்புலாரிட்டிக்கும் குறைவில்லை. ஆனால் த.வெ.க அரசின் ரியல் நிர்வாகம் அவலத்தில் இருக்கிறது.
இதற்கு இடையிலே இடைத்தேர்தல் வருமா, வராதா? என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்களோ இல்லையோ, ராஜினாமா செய்துவிட்டு போன அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க அமைச்சர்களை நச்சரித்து அதிமுக அகதிகள் அணி, இலவுகாத்த கிளியாக இடைத்தேர்தல் அறிவிப்பு காத்துக் கொண்டிருக்கிறது என்கிற செய்தி கூடுதல் செய்தியாக இருக்கிறது.
ஆகவே, த.வெ.க அரசின் இந்த நிலையற்ற தன்மையால் டுமாறுகிறதா த.வெ.க அரசின் நிர்வாகம் இன்னும் எத்தனை நாளைக்கு தான் இது நீடிக்கும்? இந்த நிலையற்ற நிர்வாகம் என்பது கேள்வி எழுகிறபோது, முதல்வர் விஜய்க்கே வெளிச்சம் பொறுத்திருந்து பார்ப்போம். நல்ல செய்தி வரும் என கூறினார்.
இதையும் படிங்க: முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!