×
 

மிளகாய் பொடி போட்ட பாயாசம்... “விஜய் அண்ணாவை” பங்கமாய் கலாய்த்த ஆர்.பி.உதயகுமார்...!

மிளகாய் பொடியை போட்டு பாயசத்தை இனிக்க வைப்பேன் என்று சொன்னால் எப்படியோ அப்படித்தான் இருக்கிறது விஜய் அண்ணாவினுடைய ஒவ்வொரு அறிவிப்பும் உள்ளது

விஜய் அண்ணாவின் பதவிப்பிரமாணம், நன்றி சொல்வது, தலைமைச் செயலகத்துக்கு வருவது மக்களிடத்திலே கை காட்டுவது அமைதிப்படை திரைப்படத்தை தான் நாம் நினைவுக்கு கொண்டு வர வேண்டி இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள காணொலியில், அறம் பொருள் இன்பம் என்ற பெயரில் 436 தொலைநோக்கு செயல் திட்டங்கள் தமிழக அமைச்சர் கூட்டத்தில் முடிவு.  விஜய் அண்ணா மீது வெற்று எதிர்ப்பு அரசியலால் இதை நான் சொல்லவில்லை தேன்கலந்த வார்த்தையால் அறிக்கை வெளியீடு அதிர்ஷ்டத்தால் வரும் வெற்றியை தொடர்ந்து தக்க வைப்பதற்கு வேண்டுமானால் இதுபோன்ற அறிவிப்புகள் உதவலாம் என்று விஜய் அண்ணா நினைக்கிறாரோ?.

அதிர்ஷ்டத்தால் வரும் வெற்றியை தொடர்ந்து தக்க வைக்க வேண்டுமானால் அதற்காக நாம் நிறைய பாடுபட வேண்டி இருக்கும் விஜய் அண்ணா.

இதையும் படிங்க: “விஜய் அண்ணாவிற்கு இது மட்டும் நல்லா தெரியும்...” - தமிழக முதல்வரை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

 விஜய் அண்ணாவுக்கு கிடைத்திருக்கும் வெற்றியை அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி என்று சொல்ல வேண்டி இருக்கிறது

 மக்கள் தொண்டு, உயர்ந்த லட்சியம், சிறந்த கொள்கை பிடிப்பு, கொடைத்தன்மை, தனி வாழ்வு தூய்மை, நிர்வாக அனுபவம், அரசியல் வரலாறு, ஆகச்சிறந்த ஆளுமையின் எடுத்துக்காட்டாக இதுபோன்ற எதுவுமே இல்லாமல் விஜய் அண்ணாவுக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றியை அதிர்ஷ்டத்தால் அமைந்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. 

விஜய் அண்ணா இதுவரை தலைமை பண்பை சினிமாவில் மட்டும்தான் காட்டிருக்கிறீர்கள் நிஜத்தில் அதனை இதுவரை காட்டியதாக நமக்கு தெரியவில்லை. 

முதல்வர் பதவியை ஏற்று ஒரு மாத காலத்திலும் விஜய் அண்ணாவின் ஆளுமை பண்பு முழுமையாக வெளிப்பட்டதாக தெரியவில்லை. சென்னையிலே அவர் பதவியேற்ற போது, திருச்சியில் அவர் நன்றி அறிவித்தபோதும், அமைச்சரவை கூட்டத்தின் செய்தியிலும் வெறும் நாடகத் தன்மை தான் மேலொன்று தோன்றுகிறது உண்மை இருப்பதாக தெரியவில்லை .

விஜய் அண்ணா கம்பீரமாக பேசுகிற அந்த பேச்சு இயற்கையை விட செயற்கையாகவே அது மேலோங்கி இருக்கிறது. விஜய் அண்ணா பதவி பிரமாணம், நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிக்கு செல்வது, தலைமைச் செயலகம் வருவது, மக்களிடத்திலே கை காட்டுவது அமைதிப்படை திரைப்படத்தை தான் நாம் நினைவுக்கு கொண்டு வர வேண்டி இருக்கிறது.

சினிமா கதாநாயகனான விஜய் அண்ணாவை உண்மை கதாநாயகனாக நினைத்து இளையோர் கூட்டம் விஜய் அண்ணா பின்னால் வருகிறது அந்த இளைய சமுதாயத்தின் எதிர்காலம் என்னாகுமோ காலம் தான் தீர்மானிக்க வேண்டும். 

விஜய் அண்ணா தமிழின தலைவனாக சட்டசபைக்குள் கோட்சூட்டுமாய் நீங்கள் நுழைந்த காட்சி ரசிக்கும்படியாக இல்லை என மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

சட்டசபையில் அத்தனை பேர்களும் தமிழ் கலாச்சார உடைகளை அமர்ந்திருக்க விஜய் அண்ணா மட்டும் மேற்கத்திய உடையிலே வருவதன் காரணத்தை புரிந்து கொள்ளவும் முடியவில்லை.

 ஒருவேளை இளையோர் சமுதாயத்தை ஏமாற்ற மேற்கத்திய உடை தான் உருப்படியான உடை என்று அவர் நினைக்கிறாரோ? விஜய் அண்ணா

பூனை மெலிந்தால் எலியும் எட்டி உதைக்கும் என்ற கதை தான் விஜய் அண்ணாவின் நடவடிக்கை பார்க்க முடிகிறது. நிர்வாகம் என்பது சினிமா வசனம் பேசும் வேலையல்ல என்பது விஜய் அண்ணாவுக்கு தற்போது தெரிய வந்திருக்கும்.

மிளகாய் பொடியை போட்டு பாயசத்தை இனிக்க வைப்பேன் என்று சொன்னால் எப்படியோ அப்படித்தான் இருக்கிறது விஜய் அண்ணாவின் ஒவ்வொரு அறிவிப்பும் உள்ளது எனக்கூறினார்

இதையும் படிங்க: "இரும்புக்கரம் கொண்டு எப்ப அடக்குவீங்க விஜய் அங்கிள்..." - சி.எம். விஜயை விளாசித் தள்ளிய ஆர்.பி.உதயகுமார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share