×
 

எவ்ளோ வாய் கொழுப்பு இருக்கும்..? முதல்வர் குறித்த பேச்சு... இபிஎஸ்-ஐ பந்தாடிய ஆர்.எஸ். பாரதி..!!

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆர். எஸ். பாரதி கண்டனம் தெரிவித்தார்.

திமுக ஆட்சியின்போது கொரோனா வந்திருந்தால் முதலமைச்சரும் போயிருப்பார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது பரப்புரையின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர் பேசும்போது, திமுக ஆட்சியில் வறட்சி வந்ததா, வெள்ளம் வந்ததா, கொரோனா வந்ததா என்று கேள்வி எழுப்பினார். அப்படியெல்லாம் வந்திருந்தால் இந்த முதலமைச்சர் காணாமல் போயிருப்பார் என்று கூறினார். இவரும் அந்த கொரோனாவில் போயிருப்பார் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கண்டனம் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து மிக இழிவாக பேசி இருப்பதாக கண்டனம் தெரிவித்தார்.

தரம் தாழ்ந்து மிகக் கேவலமாக பேசி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்தார். ஒப்பற்ற தலைவரான முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக விமர்சிப்பது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். முதல்வர் பிரச்சாரம் செல்லும் இடத்தில் எல்லாம் கூட்டம் கூடுவதை கண்டு வயிற்று எரிச்சலில் விதவிதமாய் எடப்பாடி பழனிச்சாமி பிதற்றுகிறார் என்ற விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: அவரும் கொரோனால போயிருப்பாரு..! ஸ்டாலினை இழுத்துவிட்ட EPS..! கொந்தளித்த அன்பில் மகேஷ்..!!

கொரோனா காலத்தில் வெளியே வருவதற்கு பயந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் எவ்வளவு வாய் கொழுப்பு இருந்திருந்தால் கொரோனாவில் முதல்வர் போய் சேர்ந்திருப்பார் என்று எடப்பாடி பேசி இருப்பார். எனது பாட்டமாக தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

கொலை, கொள்ளை ஆகியவை எல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கைவந்த கலை என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காலத்தில் இபிஎஸ் ஆட்சி நடத்திய இலட்சணம் அனைவருக்கும் தெரியும் என்றார். அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால் இபிஎஸ் ஆயுள் கைதியாக இருந்திருப்பார் என்றும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: “ஸ்டாலின் வந்தாரு, நீச்சல் அடிக்க விட்டாரு”... வேளச்சேரியில் நின்று ஸ்டாலினை விளாசித் தள்ளிய இபிஎஸ்....! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share