×
 

பூச்சாண்டி காட்டாதீங்க விஜய்! அந்த ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்! ஆர்.எஸ். பாரதி சவால்!

அரசியலில் வெறும் ஆவேசமான பேச்சு மட்டும் போதாது என்றும், அதற்கேற்ப செயல்பாடும் இருக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

வேலூர்: திமுகவை பார்த்து சவால் விடும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் பதிலடி கொடுத்துள்ளார். கோப்புகள் தயாராக இருப்பதாகவும், அவற்றை சட்டசபையில் வெளியிட்டால் என்ன ஆகும் என்றும் விஜய் கூறுவது குறித்து விமர்சித்த அவர், “பூச்சாண்டி காட்டுவதெல்லாம் வேண்டாம்” என்று தெரிவித்தார்.

வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், விஜய் திமுகவை நோக்கி தொடர்ந்து சவால் விடுத்து வருவதாக குறிப்பிட்டார். “கோப்புகள் ரெடியாக டேபிளில் இருக்கின்றன. நான் அவிழ்த்தால் என்ன ஆகும்” என்று சட்டசபையில் கூறுவதாக தெரிவித்த அவர், அவற்றை வெளியிடுவதுதான் அவரது பணி என்றும் கடுமையாக விமர்சித்தார்.

அரசின் கணக்குகள் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை (சிஏஜி) தாக்கல் செய்யப்படுவதாக ஆர்.எஸ்.பாரதி கூறினார். நாடாளுமன்றத்தில் மட்டுமின்றி மாநில சட்டசபையிலும் சிஏஜி அறிக்கை வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆண்களுக்கு ஏன் இலவச பஸ் இல்லை?... போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த FUN கவுண்ட்டர்....!

அரசுத் துறைகள், மாநகராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் கணக்குத் தணிக்கை நடைபெறுவது வழக்கமான நடைமுறை என்றும் அவர் குறிப்பிட்டார். சிஏஜி அறிக்கையை வைத்து மட்டும் பெரிய அளவில் பரபரப்பை உருவாக்குவது சரியல்ல என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.

தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பான பழைய அரசியல் நிகழ்வுகளையும் ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சில் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் தன்னுடன் ஜெயலலிதா அரசியல் ரீதியாக மோதியபோது தான் தெரிவித்த கருத்துகளையும், அதன்பின்னர் நடைபெற்ற சம்பவங்களையும் அவர் நினைவுகூர்ந்தார்.

டான்சி நில விவகாரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். அரசு நிலத்தை அரசு பதவியில் இருப்பவர்கள் வாங்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சை, பின்னர் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு சென்றதாக அவர் தெரிவித்தார். அந்த நிலத்தை திருப்பிக் கொடுத்திருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும் என்றும் தனது கருத்தை பதிவு செய்தார்.

அரசியலில் வெறும் ஆவேசமான பேச்சு மட்டும் போதாது என்றும், அதற்கேற்ப செயல்பாடும் இருக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார். குறிப்பாக, “வாய்க்கொழுப்பு மட்டும் இருக்கக்கூடாது” என அவர் கடுமையாக விமர்சித்தார்.

விஜய் தலைமையிலான தவெக, தமிழக அரசியலில் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுக்க முயற்சித்து வரும் நிலையில், திமுகவின் மூத்த நிர்வாகியான ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. கோப்புகள் தொடர்பான விஜய்யின் விமர்சனங்களுக்கு திமுக தரப்பில் இருந்து தொடர்ந்து பதில்கள் வெளியாகி வரும் நிலையில், வேலூரில் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்துகள் மீண்டும் இந்த விவகாரத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளன.

இதையும் படிங்க: தமிழக கவர்னராகிறார் முன்னாள் ஆந்திரா முதல்வர்? கிரண் ரெட்டிக்கு வாய்ப்பு? மத்திய அரசு ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share