×
 

பாஜக வேட்பாளர் தேர்வில் களமிறங்கும் ஆர்.எஸ்.எஸ்!! MLA சீட் யார் யாருக்கு? பதற்றத்தில் முக்கிய தலைகள்!

சென்னையில் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், பாஜகவின் உட்கட்சி பிரச்சினைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தொடர் தேர்தல் தோல்விகளுக்கு மத்தியிலும், சில முக்கிய நிர்வாகிகள் மீண்டும் போட்டியிட துடிப்பதாகவும், இதை RSS மேலிடம் தடுத்து நிறுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் RSS தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில் தமிழக பாஜக வேட்பாளர்களை RSS தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக டில்லி வட்டாரங்கள் கூறுகையில், “தமிழகத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் சிலருக்கு மட்டுமே மீண்டும் மீண்டும் வேட்பாளர் வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களுக்கு டில்லி மேலிடம் பெரும் செலவு செய்கிறது.

இதையும் படிங்க: ஓபிஎஸ்-ஐ திருப்பவும் சேக்காதீங்க! டேஞ்சர் உங்களுக்குத்தான்! இபிஎஸ் காதில் ஓதும் முக்கிய புள்ளி! இதுதான் காரணம்?!

ஆனால் தோல்வி அடைந்தாலும், அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கும் பொருளாதாரமும் பலமடங்கு உயர்கிறது. கட்சியை வளர்ப்பதை விட தங்களை வளர்ப்பதிலேயே அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். இது கட்சியின் சித்தாந்த வளர்ச்சிக்கு நல்லதல்ல” என்று தெரிவித்தன.

மேலும், “பிரபலமானவர்கள் என்ற மாயையில் அடுத்தகட்ட நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பது பிரச்சினை. வாரிசு அரசியலும் தமிழக பாஜகவில் தலைதூக்கியுள்ளது. இதுகுறித்து கட்சி நலன் விரும்பிகள் விரிவான அறிக்கையை RSS மேலிடத்துக்கு அளித்துள்ளனர். வரும் தேர்தலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க RSS முடிவு செய்துள்ளது” என்று கூறின.

சென்னை கூட்டத்தில் RSS தலைவர்கள் தமிழக பாஜகவின் வேட்பாளர்களை தேர்வு செய்வர் என்று தகவல். அவர்கள் பெயர்களை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். இந்த தகவல் கட்சிக்குள் வேகமாக பரவியுள்ளதால், பிரபலமானவர்கள் என்ற போர்வையில் வலம் வருவோரும், வாரிசு அரசியல் கனவில் உள்ளோரும் உதறலில் உள்ளனர் என்று டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவு தமிழக பாஜகவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. RSS இன் தலையீடு கட்சியின் உள் சிக்கல்களை தீர்க்கும் என்று ஒரு தரப்பும், அது கட்சி ஒற்றுமையை பாதிக்கும் என்று மற்றொரு தரப்பும் கருத்து தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: தாக்குப்பிடிப்பாரா விஜய்? 3 மாசமா ஒண்ணுமே நடக்கல?! விரக்தியில் வெடித்த தவெக நிர்வாகிகள்! பனையூரில் பகீர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share