×
 

ஓபிஎஸ்-ஐ திருப்பவும் சேக்காதீங்க! டேஞ்சர் உங்களுக்குத்தான்! இபிஎஸ் காதில் ஓதும் முக்கிய புள்ளி! இதுதான் காரணம்?!

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் தெண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால், பழனிசாமியும் அவருடன் இருக்கும் சில தலைவர்களும் விரும்பவில்லை.

அதிமுகவில் மீண்டும் ஒன்றிணைவு வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினாலும், பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அதற்கு தயாராக இல்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மீண்டும் கட்சியில் இணைய விரும்புவதாக அறிவித்தாலும், பழனிசாமி அதை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

பழனிசாமி அணியினர் கூறுகையில், “ஓபிஎஸ் எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா பாதுகாத்த அதிமுக தலைமை கழகத்தை ஆட்களை வைத்து தாக்கினார். அதனால்தான் பொதுக்குழு மூலம் அவரை கட்சியிலிருந்து நீக்கினோம். மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் “அருமை சகோதரரே” என்று பழனிசாமியை கெஞ்சியும் எந்த பலனும் இல்லை.

தென் மாவட்டங்களில் திமுக கூட்டணியை வீழ்த்த, ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்துகின்றனர். பாஜக அழுத்தத்தால் டிடிவி தினகரன் சேர்க்கப்பட்டது போல, ஓபிஎஸ்யையும் சேர்த்தால் கட்சி வலுப்பெறும் என்பது அவர்களின் கருத்து.

இதையும் படிங்க: கேட்டை இழுத்து மூடிய அதிமுக!! குழப்பத்தில் தவிக்கும் ஓபிஎஸ்!! திமுக போறதுதான் ஒரேவழியா?!

ஆனால் பழனிசாமிக்கு பின்னணியில் செயல்படும் தமிழகத்தின் பிரபல கட்டுமான நிறுவன தொழிலதிபர் ஒருவர், ஓபிஎஸ்யை எக்காரணம் கொண்டும் சேர்க்கக்கூடாது என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

“அவர் இணைந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியாக முயற்சிப்பார். கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்” என்று அவர் பழனிசாமியிடம் தூபம் போட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த தொழிலதிபர் அதிமுக ஆட்சி காலத்தில் பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர் என்றும், பெரும் பண பலன்கள் பெற்றவர் என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. 

ஒரு கட்டத்தில் பன்னீர்செல்வத்திடம் பெரும் தொகை பெற்று 'அல்வா' கொடுத்தவர் என்றும், இப்போது ஓபிஎஸ் வலுப்பெற்றால் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுப்பார் என்ற அச்சத்திலும் அவரை தடுத்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த தொழிலதிபரின் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரியவை என்றும், திமுக தலைமைக்கு நெருக்கமானவர்களுடன் உறவு வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த உள்சூட்சிகளை புரிந்து கொள்ளாமல் அவரது சொல்லுக்கு செவிசாய்ப்பது கட்சிக்கு நல்லதல்ல என்று தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அதிமுக ஒற்றுமைக்கு இது பெரும் தடையாக உள்ளது. தொண்டர்களின் ஒன்றிணைவு கோரிக்கைக்கு எதிராக பழனிசாமி அணியின் நிலைப்பாடு கட்சியில் பிளவை ஆழப்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: சொன்னபடி தை பிறந்தாச்சு!! வழி பிறக்குமா? இன்று கூட்டணியை அறிவிக்கிறார் ஓ.பி.எஸ்? யாருடன் கை கோர்ப்பு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share