“வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!
தமிழக அரசு வரும் 14ம் தேதிக்குள் மணல் குவாரிகளை திறக்காவிட்டால், 16-ம் தேதி திருச்சி யில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல ராசாமணி அறிவிப்பு
நாமக்கல் லில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தின் மாநில தலைவர் செல்ல.ராசாமணி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் : கடந்த திமுக ஆட்சியில் தனியார் மணல் சேமிப்பு கிடங்குகளிலும், அரசு மணல் குவாரிகளிகளிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்றது. அப்போது மணல் குவாரிகள் மூடப்பட்டன. மூடப்பட்ட மணல் குவாரிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படவில்லை.
பசுமை தீர்ப்பாயம் மற்றும் கோர்ட்டு அனுமதி அளித்துள்ள இடங்களிலும் மணல் குவாரிகள் திறக்கப்படாததால், தமிழகத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் எம்.சாண்ட் உற்பத்தியாளர்கள் தரமற்ற எம்.சாண்ட் உற்பத்தி செய்து தன்னிச்சையாக விலையை உயர்த்தி விற்பனை செய்கின்றனர். எம்.சாண்ட் தயாரிப்பதற்காக மலைகள் மற்றும் குன்றுகளை வெட்டி எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!
மணல் குவாரிகள் செயல்படாததால், தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 55 லாரி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மணல் குவாரிகளை திறக்ககோரி, நீர்வளத்துறை அமைச்சர், கனிமவளத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்தும் எந்த பலனுமில்லை.
முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பதிவு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பியும் உரிய பதில் இல்லை. மேட்டூர் அணை உட்பட பல அணைகளை தூர்வாரினால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் அதிகமாக மணல் கிடைக்கும்.
அணையின் நீர் கொள்ளவும் அதிகரிக்கும். தரமற்ற எம்.சாண்ட்களை வாங்கி கட்டிடங்கள் கட்டுவதால், கட்டிடங்கள் அடிக்கடி சரிந்து விழுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். வரும் 14 ம் தேதிக்குள் தமிழக அரசு மணல் குவாரிகளை திறந்து நேரடியாக ஆன்லைன் மூலம், மணல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால், முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 16 ம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, பேரணியாக சென்று, திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் கூறினார்.
இதையும் படிங்க: "ஆட்சி ஆட்டம் காணும்"..! வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் CM விஜய்... பழ. கருப்பையா விமர்சனம்..!