×
 

டிடிவி, எடப்பாடியை வீழ்த்த வியூகம்!? விஜயுடன் கைகோர்க்கும் சசிகலா! தென் தமிழகத்தில் பலம் சேர்க்கும் கூட்டணி!

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அவருடன் கைகோர்த்துள்ள அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் இருவரையும் வீழ்த்த சசிகலா வியூகம் வகுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் வியூகத்தை வகுத்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து திரும்பிய பின் தீவிர அரசியலில் களமிறங்க ஆசைப்பட்ட சசிகலா, சட்ட ரீதியான தடைகளால் நேரடி அரசியலை தவிர்த்தார். ஆனால் அவரது அரசியல் ஆர்வம் தணியவில்லை.

கடந்த சில மாதங்களாக தன் ஆதரவாளர்களை வீட்டுக்கு அழைத்து ஆலோசனை நடத்தி வரும் சசிகலா, "என் ஆதரவில்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது" என்று ஓங்கி உரைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் கேலியாக பார்க்கப்பட்டாலும், அடுத்தடுத்த நகர்வுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

சசிகலாவின் சகோதரர் வி.கே. திவாகரன் தலைமையிலான அண்ணா திராவிடர் கழகம் (அ.தி.க.) கட்சியை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) உடன் கூட்டணி சேர வைத்துள்ளார். தென் மாவட்டங்களில் 25 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஓபிஎஸ்-ஐ கழட்டி விட்டு விஜயுடன் கூட்டணி!! பண்ருட்டி ராமச்சந்திரன் புது ரூட்!! உதயமாகுது புது கட்சி!

இது குறித்து சசிகலா ஆதரவாளர் கூறியதாவது: அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்ட சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்தார். ஆனால் பழனிசாமி மறுத்துவிட்டார். பா.ஜ.க. நெருக்கடியால் அ.ம.மு.க.வை மட்டும் தே.ஜ. கூட்டணியில் சேர்த்துக்கொண்டார். பன்னீர்செல்வத்துக்காக முயன்ற செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினார்.

இதனால் பழனிசாமி மீதும் தினகரன் மீதும் கடும் கோபத்தில் உள்ள சசிகலா, இருவரையும் வீழ்த்த துடிக்கிறார். அதற்காக தன் சகோதரரின் அ.தி.க.வை த.வெ.க.வுடன் இணைத்துள்ளார். திவாகரனின் மகனும் இளைஞர் அணி செயலருமான ஜெய் ஆனந்த் திவாகர் நேற்று விஜயை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.

தென் தமிழகத்தில் அ.தி.மு.க. – அ.ம.மு.க.வுக்கு பெரும் சவாலாக இந்த கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவின் இந்த நகர்வு 2026 தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளில் மேலும் முக்கிய அறிவிப்பு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பாஜக - அதிமுக கூட்டணியில் இணைகிறதா தவெக! இரண்டாக பிரியுதா காங்கிரஸ்? செங்கோட்டையன் பதில்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share