த்ரிஷா முன்னேற்றத்திற்காக எதையும் செய்வார்... விஜயை சரமாரியாக சாடிய சாட்டை துரைமுருகன்...!
விஜய் பெண்களுக்கு தரும் மரியாதையா?. பெண்கள் முன்னேற்றத்திற்காக விஜய் எதையும் செய்யவில்லை.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று திருச்செங்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரேவதியை ஆதரித்து சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: எங்கள் போட்டி கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியோடு அல்ல கிங்மேக்கர் கர்மவீரர் காமராஜரை விட சிறந்த ஆட்சி தருவது தான் எங்கள் நோக்கம். பெரும் அரசியல் கட்சிகளால் ஒதுக்கப்பட்ட பல்வேறு சிறு சமுதாயங்களுக்கும் நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர்களாக சீட் கொடுக்கப்பட்டுள்ளது அதேபோல் சரிக்கு சரி ஆணுக்கு பெண் சமம் என்பதற்கு 117 ஆண்கள் 117 பெண்கள் என தமிழகத்திலும் 15 பெண்கள் 15 ஆண்கள் என பாண்டிச்சேரியிலும் நாம் தமிழர் கட்சி சீட் கொடுத்துள்ளது
ஆனால் அண்ணா அண்ணா என்று கூறும் விஜய் ரசிகைகளை பாண்டிச்சேரியில் 30 நபர்களில் இரண்டு பெண்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் விஜய் பெண்களுக்கு தரும் மரியாதையா?. பெண்கள் முன்னேற்றத்திற்காக விஜய் எதையும் செய்யவில்லை. ஆனால் திரிஷா முன்னேற்றத்திற்காக தான் அவர் எதையும் செய்கிறார்.
இதையும் படிங்க: விடிந்ததுமே ஷாக்... தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புதிய விண்ணப்பம்... அன்புமணி தலையில் இறங்கியது இடி...!
நான் படத்தில் நடிக்க வைத்து வாய்ப்பு கொடுத்ததை சொன்னேன். வேறு எதுவும் இல்லை.விஜய் என்டர்டைன்மெண்ட் வித்தவுட் ரெஸ்பான்சிபிலிட்டி. ஆனால் நாம் தமிழர் கட்சி என்டர்டைன்மென்ட் வித் ரெஸ்பான்சிபிலிட்டி.நாட்டிலே மருத்துவர் தோற்கலாம், விஞ்ஞானி தோற்கலாம், பொறியாளர் தோற்கலாம் ஆனால் விவசாயி மட்டும் தோற்கக் கூடாது
வரும் 23ஆம் தேதி நாம் தமிழர் கட்சி விவசாயி ஏர்கலப்பை தூக்கிக்கொண்டு திராவிடத்தையும் தேசியத்தையும் தற்குறிகளையும் உல வருகிறார்... அன்று நீங்கள் செலுத்தும் வாக்கு வாக்கல்ல வாழ்க்கை என்ற எண்ணத்தில் ஓட்டு போடுங்கள் என சாட்டை துறைமுகம் பேசி முடித்தார். இந்த கூட்டத்தில் திருச்செங்கோடு தொகுதி வேட்பாளர் ரேவதி குமாரபாளையம் தொகுதி வேட்பாளர் சங்ககிரி தொகுதி வேட்பாளர் பரமத்தி வேலூர் தொகுதி வேட்பாளர் கரூர் தொகுதி வேட்பாளர் ஆகிய நான்கு பேரை அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பேச்சாளர் உமாயுன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இதையும் படிங்க: திருநங்கைகள் உரிமை பறிபோகும் அபாயம்... மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு...!