×
 

சிறையில் நடந்த சித்ரவதைகள்!! வாழ விட மாட்டார்கள்! அவங்க ப்ளானே இதுதான்! சவுக்கு சங்கர் கோவம்!

'3வது முறை என்னை கைது செய்து இருக்கின்றனர். அரசு ஒரு யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது என்பதை தவிர, இதற்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும்'' என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கர் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் அளித்த பேட்டியில், தனக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். புழல் மத்திய சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.

சிறையில் தன்னை 300 முதல் 400 கைதிகளுடன் ஒரே பிளாக்கில் வைத்திருந்ததாகவும், முதல் நாளே சிசிடிவி கேமராக்களை கூடுதலாக பொருத்தியதாகவும் கூறினார். ஒரு கைதி வாழைப்பழம் கொடுத்ததால் அவரை வேறு பிளாக்குக்கு மாற்றிவிட்டதாகவும், மற்றொருவர் மிக்சர் கொடுத்ததால் அவரையும் மாற்றிவிட்டதாகவும் தெரிவித்தார்.

தன்னுடன் பேசினால் காவலர்கள் சஸ்பெண்ட் ஆகிவிடுவார்கள் என்று மிரட்டப்பட்டதாகவும், யாரும் பேசாமல் இருந்தால் அது தனிமைச் சிறைதானே என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: கதவை உடைத்து தூக்கிய போலீஸ்! அசால்டாக வெளியே வந்த சவுக்கு சங்கர்!! வைரலாகும் வீடியோ!

சிறையில் ஒருவர் வாங்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளைப் படித்ததற்காக அவருக்கு செய்தித்தாள் கொடுத்தால் ஜெயில் மாற்றம் செய்வதாக மிரட்டப்பட்டதாகவும் கூறினார். தன் மீது 48 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றுக்கு ஜாமீன் பெற 4 ஆண்டுகள் ஆகும் என்றும், அதுவரை உடல்நிலை தாங்காது என்றும் கவலை தெரிவித்தார். உடல்நிலை மோசமாகி இறந்துவிட்டால் அரசுக்கு நிம்மதி என்ற நோக்கில் அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

உயர்நீதிமன்றம் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்கியதாகவும், அரசின் நோக்கம் தன் யூடியூப் சேனலை நடத்த விடாமல் தடுப்பதே என்றும் கூறினார். ஒரு யூடியூப் சேனலைப் பார்த்து அரசு பயப்படும் நிலைக்கு தமிழகம் வந்துவிட்டதாகவும், இது தவிர வேறு என்ன பொருள் இருக்க முடியும் என்றும் கேட்டார். 

இதுவரை மூன்று முறை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அரசில் நடக்கும் தவறுகளை தான் தவிர வேறு யார் பேசுகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். காசு வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தால் வாழலாம், இல்லையென்றால் வாழ விடமாட்டார்கள் என்றும் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.

இந்த பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டுகள் சுதந்திரமான கருத்துரிமை குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளன.

இதையும் படிங்க: யுடியூபர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின்!! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share