மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு... ஸ்தம்பிக்கும் திருச்சி... சீமானுக்கு உற்சாக வரவேற்பு..!!
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாநாடு இன்று மிகுந்த எழுச்சியுடனும் கோலாகலமாகவும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு - 2026' என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாடு, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூர் பகுதியில் திறந்தவெளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டுத் திடல் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது. சுமார் 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கென தனி வசதிகள், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் முழுமையாக செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டை முன்னிட்டு நகரம் முழுவதும் கட்சிக் கொடிகள், வரவேற்பு பதாகைகள் நிரம்பியிருக்கின்றன. திருச்சி நகரிலிருந்து திடல் வரை 25 கிலோமீட்டர் தூரத்திற்கு கொடிகளும் பேனர்களும் வைக்கப்பட்டிருப்பது கட்சியின் தொண்டர்களின் உற்சாகத்தை பிரதிபலிக்கிறது. மாநாடு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் களைகட்டின.
இதையும் படிங்க: என்ன மக்களே ரெடியா? காரைக்குடியில் சீமான் பேட்டி? வெளியான முக்கிய தகவல்..!!
தொண்டர்கள் பெருந்திரளாக குவிந்து வருவதால் திடல் முழுவதும் உற்சாகக் கூச்சல்களால் நிரம்பியது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். சீமான் மற்றும் அவரது குடும்பத்தினர் நிகழ்ச்சிக்கு வருகை தந்த போது தொண்டர்கள் உற்சாக முழக்கங்களை எழுப்பி வரவேற்றனர்.
இதையும் படிங்க: ஒரே மேடையில் 234 தொகுதி வேட்பாளர்கள்... திருச்சியில் சீமானின் பிரம்மாண்ட மாநாடு...!