×
 

காரைக்காலில் களமிறங்கும் சீமான்!! சாதி ஓட்டுக்கு குறி வைக்கும் நாம் தமிழர் கட்சி!

காரைக்குடியில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெற்றிக்கு ஜாதி ஓட்டுகளை பெற, அவரது கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் களத்தில் காரைக்குடி தொகுதி இப்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இங்கு போட்டியிடும் நிலையில், அவரது வெற்றிக்காக ஜாதி அடிப்படையிலான ஓட்டுகளை திரட்ட கட்சி நிர்வாகிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

காரைக்குடி தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தினர் 25 முதல் 30 சதவீதம் வரை ஓட்டுகள் வைத்துள்ளனர். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் 12 முதல் 14 சதவீதம், நகரத்தார் (செட்டியார்) சமூகத்தினர் சுமார் 12 சதவீதம், யாதவர் மற்றும் சிறுபான்மையினர் சுமார் 10 சதவீதம் ஓட்டுகள் உள்ளன. இதில் முக்குலத்தோர் ஓட்டுகளே வெற்றியை பெரிதும் தீர்மானிக்கும் என கட்சியினர் கருதுகின்றனர்.

கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர் இங்கு 21 சதவீதம் ஓட்டுகளை பெற்றிருந்தார். இந்த முறை சீமானுக்கு அனைத்து சமூக ஓட்டுகளும் தேவை என்பதால், கட்சி நிர்வாகிகள் அனைத்து பிரிவினரிடமும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். “சீமானை எந்த ஒரு ஜாதிக்குள்ளும் அடைக்க முடியாது. அவர் அனைத்து சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கும் ஆதரவாக இருந்து வருகிறார்” என நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர்!! ஒரு கிலோ தங்கம் தருவேன்!! வாக்குறுதிகளில் விளையாட்டு காட்டும் சீமான்!!

முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், நகரத்தார் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களின் பிரச்சினைகளை சீமான் தொடர்ந்து பேசி வருவதை சுட்டிக்காட்டி, அவர்கள் ஓட்டுகளை கணிசமாக பெற முடியும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சீமான் தொடர்ந்து தமிழ் தேசியம், சமூக நீதி, இளைஞர் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகிறார்.

காரைக்குடி தொகுதி இம்முறை மும்முனைப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீமானின் வேட்புமனு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பிரசாரம் அடுத்த சில நாட்களில் தீவிரமடையும் என தெரிகிறது. ஜாதி ஓட்டுகளை தாண்டி, அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற சீமான் முயற்சி செய்வார் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தொகுதியில் சீமானின் செயல்பாடு நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், காரைக்குடி களம் சூடுபிடித்துள்ளது.

இதையும் படிங்க: சீமானின் சொத்து மதிப்பு ரூ.3.83 கோடி!! ரூ. 5.11 லட்சம் கடன்!! 24 நிலுவை வழக்குகள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share