“உனக்கே உன் மேல நம்பிக்கை இல்ல...” - விஜயை வெளுத்து வாங்கிய சீமான்... அண்ணாமலை, இபிஎஸுக்கும் அதிரடி ரிப்ளே...!
தன்னையும் நம்பாமல், மக்களையும் நம்பாதவனே இரண்டு தொகுதியில் போட்டியிடுவான். இது மக்கள் விரோதம். நம்பிக்கையோடு இருங்கள் வெற்றி பெறுவோம் என்று பேசுகிறவருக்கே நம்பிக்கை இல்லையே.
நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கலாமணியை ஆதரித்து, காளப்பட்டி பகுதியில் சீமான் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஊழல் கட்சி என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார். அப்படி ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அதிமுக, இப்போது நல்ல கட்சியாக மாறிவிட்டதா?. அக்கட்சியின் தலைவியே குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த போது எப்படி அந்த கட்சி ஊழலில்லாத கட்சியாக மாறிவிட்டது.இப்போது கூட்டணியில் உள்ளவர்கள் பாரதிய ஜனதா மதவாத கட்சி என்று சொன்னார்கள். இப்போது மதவாதத்தை விட்டு விட்டு வெளியேறி வந்து விட்டதா?. எதற்காக கூட்டணி வைத்தீர்கள்? இதுதான் பிழைப்பு வாதம், சந்தர்ப்பவாதம்.
மக்களின் நலனை விட்டு தங்களின் அற்ப தேர்தல் வெற்றியே முதன்மையானது என்று எண்ணுகின்றனர். தங்களின் பதவி மேன்மையானது முதன்மையானது கருதுகிற சந்தர்ப்பவாதிகள் இவர்கள். என் ஆதி சிவனும், இந்த சீமானும் மட்டுமே பெண்களுக்கு சரிபாதி கொடுத்தோம். மற்றவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். எங்களுக்கு தமிழ் சாதியே இருக்கிறது. வேறு எந்த சாதியும் இல்லை. சாதிக்க வேண்டும் என்றால் சாதியை விட்டுவிட்டு அண்ணனிடம் வாருங்கள். மனிதநேயம் வேண்டும் என்றால் என்னோடு வாருங்கள் இங்கு எல்லாவற்றிற்கும் அரசியல் உள்ளது.
இதையும் படிங்க: வானதி ‘OUT' அண்ணாமலை ‘IN'... அதிரடி ஆட்டத்திற்கு தயாராகும் தமிழக பாஜக... டெல்லிக்கு பறந்த முக்கிய லிஸ்ட்...!
சீமான் பைத்தியகாரன், கிறுக்கன் மரத்தை கட்டிப்பிடிக்கிறான் என்கிறார்கள். மரம் என்றால் என்னவென்றே தெரியாது என்பவர்களை என்ன செய்வது? மரத்திடம் என் ஓட்டு இல்லை. என் உயிர் இருக்கிறது. அதனால் நான் அதனை நேசிக்கிறேன். மரம் இல்லையென்றால் மழையும் இல்லை, பணமும் இல்லை. பாடத்திட்டதில் இது இல்லாததால் நான் வாக்கு கேட்பதை விட்டுவிட்டு இதை சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
கூட்டத்தில் நிற்க வீரமும் துணிவும் தேவையில்லை, தனியாக நிற்கவே வீரம் வேண்டும். தன்னையும் நம்பாமல், மக்களையும் நம்பாதவனே இரண்டு தொகுதியில் போட்டியிடுவேன். நம்பிக்கையோடு இருங்கள் வெற்றி பெறுவோம் என்கிறார். ஆனால் உனக்கே நம்பிக்கை இல்லையே. இரண்டு முறை நான் தோற்றேன். என்னை தோற்கடித்தவர் என் தாய் தந்தை தான். ஒரு நாள் இந்த பிள்ளைகளை கொண்டாடும் காலமும் வரும், ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதியில் போட்டியிடுவது மக்கள் விரோதம்.எனக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லவில்லை. எது சரியோ அதற்கு ஓட்டுப்போடுங்கள்.
இதையும் படிங்க: 4 வருசம் கூட ஆகல!! அதுக்குள்ள இப்பிடி கோர சம்பவம்!! சமயபுரம் கோயிலில் பெண் பலி!! அரசை விளாசும் அண்ணாமலை!