×
 

அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டி பூசல்! கட்சி மாற தயாராகும் மாஜி எம்.எல்.ஏ! இபிஎஸ்க்கு தலைவலி!

சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி பூசலால், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரன், தி.மு.க.,வுக்கு தாவ உள்ளதாக தகவல் பரவி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டசபைத் தொகுதியில் அ.தி.மு.க.வுக்குள் நீண்டகாலமாக நிலவும் கோஷ்டி பூசல் தீவிரமடைந்துள்ளது. முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அ.தி.மு.க.வுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2016 முதல் 2021 வரை சேந்தமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்எல்ஏவாக இருந்த சந்திரசேகரன், அப்போதே நாமக்கல் மாவட்டச் செயலர் தங்கமணியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பனிப்போர் நிலவியது. 2021 தேர்தலில் மீண்டும் சீட் கேட்டபோது தங்கமணி மறுத்துவிட்டார். 

அவருக்கு பதிலாக சந்திரன் என்பவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. இதில் கடும் அதிருப்தியடைந்த சந்திரசேகரன் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்டார். இதனால் அ.தி.மு.க. வேட்பாளர் தோல்வியடைந்தார்.

இதையும் படிங்க: அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்! பியூஸ்கோயல் தமிழகம் வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடுகள் இறுதி?!

இரு ஆண்டுகளுக்கு முன்பு சந்திரசேகரன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஆனால் தங்கமணி அணி – சந்திரசேகரன் அணி என கட்சி இரு பிரிவுகளாக பிளவுபட்டு செயல்பட்டு வருகிறது.

வரும் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட விரும்பிய சந்திரசேகரன், தொகுதி மக்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை வாரி வழங்கி வந்தார். பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சீட் கேட்டபோது, "மாவட்டச் செயலர் தங்கமணியை சந்தியுங்கள், அவர் முடிவு செய்வார்" என்று கூறப்பட்டது.

இதற்கிடையே கடந்த தேர்தலில் போட்டியிட்ட சந்திரனே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்தது. இதனால் மிகுந்த விரக்தியடைந்த சந்திரசேகரன், "இனி அ.தி.மு.க.வில் இருப்பது சரியல்ல" என்று முடிவெடுத்துள்ளார். அவர் தி.மு.க.வில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சேந்தமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி பெருமளவு சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சந்திரசேகரன் தி.மு.க.வில் இணைந்தால் தொகுதியில் மூன்று முனைப் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் உள் கோஷ்டி பூசல் தேர்தல் களத்தை பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
 

இதையும் படிங்க: மும்பையில் த்ரிஷாவிடம் அமித்ஷா தரப்பு பேச்சுவார்த்தை?! அதிமுக -பாஜகவில் இணைகிறதா தவெக?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share