செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... சட்டைப்பையில் விஜய் உடன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டோ... காரணம் என்ன?
இன்று வேலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நடைபெறும் சமயத்தில் செங்கோட்டையனிடம் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் மூத்த தலைவராக இருந்தவர் செங்கோட்டையன். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பறித்திருந்தார். அதைத்தொடர்ந்து, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்ததன் காரணமாக அதிமுகவிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இதையடுத்து நவம்பர் 26ம் தேதி கோபிசெட்டிபாளையம் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், அடுத்த நாளே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
அரசியலைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவையே செங்கோட்டையன் தலைவராக கருதி வந்தவர். அதிமுகவில் இருந்த போதும் கூட அப்போதைய முதலமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி படத்தை என்றும் அவர் சட்டை பையில் வைத்துக் கொண்டது இல்லை. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த போது கூட செங்கோட்டையனின் சட்டை பையில் ஜெயலலிதாவின் படம் இருந்தது.
ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் அலுவலத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தவெக தலைவர் விஜய் படங்களுடன் பேனர் வைக்கப்பட்டுள்ளன. இன்று வரை செங்கோட்டையனின் இந்த செயலை தமிழக வெற்றிக் கழக தலைமை நிர்வாகிகள் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை ரசிக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தலைவர் என்றால் அது விஜய் மட்டுமே, கட்சி மாறிவிட்டால் சகலத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் செங்கோட்டையன் ஜெயலலிதா படத்துடனும், தவெக துண்டுடனும் தான் அரசியல் களத்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: தீய சக்திக்கு END CARD… என் ஆட்சி எப்படி இருக்கும் தெரியுமா? பக்காவாக லிஸ்ட் போட்ட விஜய்..!!
ஆனால் இன்று வேலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நடைபெறும் சமயத்தில் செங்கோட்டையனிடம் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று வேலூரில் விஜயின் மக்கள் சந்திப்பில் பங்கேற்ற தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தனது சட்டை பாக்கெட்டில் விஜய் புகைப்படத்தை வைத்துள்ளார். அதிலும் ஒரு ட்விஸ்ட்டாக விஜய் படத்திற்கு மேல் இரண்டு கார்னர்களிலும் ஜெயலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் படங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கல்லாப்பெட்டி கூட்டணி... சொத்து விவரத்தை வெளியிட தயாரா? விஜய் கேள்வி..!!