உங்க தொகுதிக்கு மட்டும் 'விஜய்' வராததற்கு காரணம் என்ன? ஓட்டு போட்ட கையோடு உண்மையை உடைத்த செங்கோட்டையன்!!
தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு செங்கோட்டையனே விளக்கமளித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அரசியலில் தீவிரமாக உள்ள செங்கோட்டையன், கோபி தொகுதியில் மட்டும் 8 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அனுபவம் மிக்க தலைவர். இப்போது 9-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டார். இரட்டை இலை சின்னத்தில் 8 முறை வென்ற அவர், முதல் முறையாக விசில் சின்னத்தில் களமிறங்கினார். 50 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான செங்கோட்டையனுக்கு தவெக விஜய் நேரடியாக பிரசாரத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது முதலே விஜயின் பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பு, ரோடு ஷோ உள்ளிட்டவற்றிற்கு காவல்துறையிடம் அனுமதி பெறுவது முதல் கூட்டத்தை ஒருங்கிணைப்பது வரை முக்கிய பங்காற்றி வந்தார்.
இதனால் விஜய் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த நிலையில், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வாக்கு சேகரித்த விஜய், செங்கோட்டையன் தொகுதி பக்கம் தலைவைத்து கூட படுக்கவில்லை. தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு செங்கோட்டையனே விளக்கமளித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் தொகுதி தவெக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் வாக்களிப்பதற்காக, கோபி அருகே குள்ளம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வெற்றி என்பது உறுதியான ஒன்றாக இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்திடைய தலைவர் நாளை தமிழகத்தை ஆள்வது நிச்சயம் என்பதை இந்த நேரத்திலே கோடிட்டு காட்டி, இங்கே வருகை தந்திருக்கிற அத்தனை பேருக்கும் கோடான கோடி நன்றி. இந்த தொகுதி வளம் பெறுவதற்கு அவரோடு உடனடிருந்து அந்த பணிகளை நான் மேற்கொள்வேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்.
இதையும் படிங்க: “ஒரு மணி நேரம் வெயில்ல நிற்க முடியல...” - பெயரைக்கூட சொல்லாமல் விஜயை சரமாரியாக சாடிய திமுக அமைச்சர்...!
இந்த மும்முனை போட்டிய எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, இவர்கள் வேறு அவர்கள் வேறுல்ல ஒரே முகமாகத்தான் அத்தனை பேரும் இருக்கிறார்கள். நீங்கள் பார்க்கின்ற போது 23 கட்சிகளும் தவெகவைத் தான் எதிர்க்கிறார்கள். ஆகவே அனைவரும் ஒருவரை எதிர்க்கிற போது எல்லோரும் ஒன்றுதான் என்றார். கோவையில் தேர்தல் சமயத்தில் நடந்த பணப்பட்டுவாடா தொடர்பான கேள்விக்கு, இது கோவையில் கேட்க வேண்டிய கேள்வி. அங்கே என்ன நடந்தது என்பது எல்லோரும் பத்திரிக்கை வாயிலாக தெரிந்திருக்கும். தவறு இருந்தால் உடனடியாக உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.
கோபி தொகுதிக்கு மட்டும் கூடுதலா இரண்டு முறை வந்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்துவிட்டு சென்றிருக்கிறார். அந்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடுமா? என்ற கேள்விக்கு, அவர் இங்கு வந்து என்னை பற்றி பேசிய, எனக்கு கூடுதலாக வாக்கு பெறுவதற்கு வாய்ப்பு அளித்துவிட்டு சென்றிருக்கிறார். தமிழகத்தின் பல பகுதிகளில் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் ஆனால் ஈரோடு மாவட்டத்தில மட்டும் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லையே என்ற கேள்விக்கு, தேர்தல் பிரசாரத்திற்கு முன்னதாக மாபெரும் மாநாட்டையே நடத்தி காட்டிவிட்டேனே என்றார்.
இதையும் படிங்க: சிக்கித் தவிக்கும் வாக்காளர்கள்..! வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கணும்..! விஜய் வலியுறுத்தல்..!!