×
 

“எங்க சீனியாரிட்டி தான் அவங்க வயசு” - இபிஎஸ் செயலால் கடுப்பான அதிமுக சீனியர்கள்...!

கட்சியில் எங்களோட சீனியாரிட்டிதான் அந்த பசங்களோட வயசு. அவங்க எங்களை இப்படி எல்லாம் கேட்கறது சங்கட்டமாக இருக்கிறது என புலம்புறாங்களாம். 

2026 சட்​டமன்​றத் தேர்​தலை மனதில் வைத்து தமி​ழ​கத்​தின் அனைத்து முக்​கிய கட்​சிகளுமே கூட்​ட​ணி​களை கட்​டமைப்​பது, கட்​சி​யினரை தேர்​தலுக்கு தயார்​படுத்​து​வது என மும்​முரம் காட்டி வரு​கின்​றன. இதில், ஆளும் கட்​சி​யான திமுக-​வும் ஆண்ட கட்​சி​யான அதி​முக-​வும் மற்​றவர்​களை விட ஒருபடி மேலாகவே தேர்​தலுக்​கான ஆயத்​தப் பணி​களை முடுக்​கி​விட்​டுள்​ளன.

அதேசம​யம், பூத் கமிட்டி அமைத்​தல், அதன் செயல்​பாடு​களை ஒழுங்​குபடுத்​துதல் உள்​ளிட்ட அடிப்​படை​யான விஷ​யங்​களில் அதி​முக இன்​னும் தேக்க நிலை​யிலேயே இருக்​கிறது. ஒரு சில இடங்​களில் மாவட்​டச் செய​லா​ளர்​களே பூத் கமிட்டி விஷ​யத்​தில் பொய்க் கணக்​கு எழு​தி​யும் கட்​சித் தலை​மை​யிடம் பொல்​லாப்​பு அடைந்​திருக்​கி​றார்​கள். ஓரணியில் தமிழ்நாடு என்று சொல்லி ஹைடெக்காக கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சியான திமுக.  அதற்கு முன்னதாகவே பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக தலைமை, தான் நினைத்தபடி பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக செய்துமுடிக்கவில்லை என்று கண்டுபிடித்து அந்த மாவட்டச் செயலாளர்களை ட்ரில் வாங்கியது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த திடீர் முடிவால் அதிமுகவில் இருக்கிற சீனியர் தலைவர்கள் கட்சியின் ஐடிவிங் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். 2026 தேர்தல்ல ஆத்திமுகாவோட பூத் கமிட்டி பக்காவா இருக்கணும்னு ஆசைப்படுறாராம் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில இருக்கிற 70,000 பூத்துகளுக்கும் குறைந்தபட்சம் ஒன்பது பேரை நியமிக்கணும்ங்கிறது அவரோட கனவுங்கிறாங்க. இதுக்காக கடந்த மூணு வருஷமா பல கூட்டங்களை போட்டு நிர்வாகிகளை நேரில் அழைத்து பல வியூகங்களை வகுத்து கொடுத்தாராம். 

இதையும் படிங்க: அதிமுகவுக்கு ரூட்டை கிளியர் செய்து விட்ட உதயநிதி... செம்ம குஷியில் எடப்பாடி பழனிசாமி...!

அப்படி எல்லாம் செய்தாலும், எடப்பாடி பழனிசாமியோட பூத் கமிட்டி திட்டம் இன்னும் நிறைவேறாமல் இருக்குங்கிறாங்க. இதை சரி செய்ய மாவட்ட செயலாளர்களை கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளர்களை நியமிச்சாரு எடப்பாடி பழனிசாமி. அதன்பிறகும் ஓரளவு வேலைகள் கூட அதிமுக பொதுச்செயலாளர் நினைச்ச அளவுக்கு பூத் கமிட்டி வேலைகள் நடக்கவில்லை. இதனால் பூத் கமிட்டிகளை சரிபார்க்க கட்சியோட ஐடிவிங்கில் வேலை பார்க்கிற இளைஞர்களை தொகுதிவாரியாக நியமிக்கப்பட்டிருக்காங்களாம். இந்த இளைஞர்கள் வயசுலயும் சர்வீஸ்லயும் சீனியர்களான மாவட்ட செயலாளர்களை கூப்பிட்டு இந்த வேலையை முடிச்சிட்டீங்களா?,  பொதுச்செயலாளர் சொன்ன மாதிரி ஏன் செய்யல? அப்படின்னு துருவ துவங்கி இருக்காங்களாம். 

கட்சியில் எங்களோட சீனியாரிட்டிதான் அந்த பசங்களோட வயசு. அவங்க எங்களை இப்படி எல்லாம் கேட்கறது சங்கட்டமாக இருக்கிறது என புலம்புறாங்களாம். 

இதையும் படிங்க: இபிஎஸ் அடிமை… என்ன பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு உதயநிதி? தொண்டர்கள் ஷாக்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share