×
 

அதிமுகவுக்கு ரூட்டை கிளியர் செய்து விட்ட உதயநிதி... செம்ம குஷியில் எடப்பாடி பழனிசாமி...!

காலையில் இருந்தே தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பான பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தை அதிரவிட்டு வருகின்றன. இதனிடையே ஒற்றை வார்த்தையில் அதிமுக, தவெக கூட்டணி சேருவதற்கு இருந்த தடையை உதயநிதி ஸ்டாலின் உடைத்துள்ளார். 

கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பரிதாபத்தை விட தற்போது தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தான் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஒரு பக்கம் விஜய்க்கு எப்படியாவது உதவிக்கரம் நீட்டி கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என பாஜக தரப்பு துடியாய் துடித்து வருகிறது. இன்னொரு பக்கம் தமிழக காங்கிரஸில் உள்ள மூத்த தலைகள் சில டெல்லிக்கே சென்று தவெகவுடன் கூட்டணி வைத்தால் நமது எதிர்காலம் பிரைட்டாக இருக்கும்  என ராகுல் காந்தியிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. 

ராகுல் காந்தியும், விஜய்யும் நீண்ட கால நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இருவரும் அரசியல் தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும், கூட்டணி குறித்து பேசி வருவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. கரூர் விவகாரத்தில் கூட சட்ட ரீதியிலான உதவிக்காக ராகுல் காந்தியுடன் விஜய் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

ஏனெனில் கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளதாம். யாருடைய ரெக்கமெண்டேஷன் வந்தாலும் அதை ஏத்துக்க மாட்டோம், சட்டப்படியாகதான் நாங்க போவோம் அப்படிங்கறதுல திமுக உறுதியா இருக்காங்க. அதனாலதான் தமிழக வெற்றி கழகத்தினுடைய பொதுச்செயலர் ஆனந்த்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்காம். சட்டப்படி கோர்ட் சொல்றதுதான் நாங்க செய்வோம் அப்படிங்கறதுல உறுதியா இருக்காங்க. இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் உதவியை விஜய் நாடியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: இபிஎஸ் அடிமை… என்ன பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு உதயநிதி? தொண்டர்கள் ஷாக்…!

கொள்கை எதிரி எனக்கூறிய பாஜகவுடன் கூட்டணி வைக்க விஜய் விரும்பவில்லையாம். அதனால் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க விஜய்க்கு ஒரு ஐடியா இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணி விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியிடம் விஜய் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த பேச்சுவார்த்தையின் போது விஜய் ஒரே ஒரு கன்டிஷனை மட்டும் ராகுல் காந்தியிடம் விஜய் வைத்துள்ளாராம். அதாவது கரூர் சம்பவத்தில் தனது பெயரில் வழக்குப்பதிவு செய்யப்படக்கூடாது, தொடர்புபடுத்தக்கூடாது என்ற கன்டிஷனை முன்வைத்துள்ளார். இதற்கு ராகுல் காந்தி தரப்பில் தவெகவிற்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம், அஞ்ச வேண்டாம் என கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

ஆனால் தமிழகத்தில் வலிமையான கட்சியாக திமுக இருப்பதால் இப்போது கூட்டணியை முறித்துக்கொள்ள ராகுல் காந்தி தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனக்கு ஆதரவாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேர்ந்து விஜய் திமுகவை மண்ணைக் கவ்வ வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையில் தான் நேற்று குமாராபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தவெக கொடி பறந்தது குறித்து பிள்ளையார் சுழி போட்டாச்சு என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். எக்காரணம் கொண்டும் விஜய், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்து வந்தது. 

இதனிடையே திண்டுக்கலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என்னுடைய கைகளுடன் இந்த நிகழ்ச்சி மேடைக்கு நான் வருவேனா என்ற சந்தேகம் இருந்தது. கை நம்மை விட்டுப் போகாது. நான் என்னுடைய கையை கூறினேன். உங்கள் மேல் உள்ள நம்பிக்கையை கூறினேன் என பேசியுள்ளார். அதாவது திமுக - காங்கிரஸ் கூட்டணி எக்காரணம் கொண்டும் உடையாது என்பதைத் தான் உதயநிதி சூசமாக தெரிவித்துள்ளார் எனக்கூறப்படுகிறது. இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி சொல்வது போல், அதிமுகவுடன் தவெக கூட்டணி சேருவது உறுதியாகியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 
 

இதையும் படிங்க: நயினாருக்கு கல்தா கொடுத்த இபிஎஸ்... ஜே.பி. நட்டாவும் இப்படி கைவிரிச்சிட்டாரே... அதிர்ச்சியில் கமலாலயம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share