×
 

விடிந்ததுமே அதிர்ச்சி...!! - ஆதவ் அர்ஜுனாவுக்கு பேரிடி... வீடியோ ஆதாரத்துடன் பரபரப்பு புகார்...!

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அசோக் குமார், ஆதவ் அர்ஜுனா மீது அளித்துள்ள புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட அண்ணாவரம் பகுதியில், தவெகா கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறு குழந்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கட்சியின் சின்னமும், நடிகர் விஜயின் படமும் அச்சிடப்பட்ட டீஷர்ட்களை வழங்கி, அவர்களிடம் விசில் ஊதச்செய்து தெருக்களில் வாக்கு சேகரித்ததாக குற்றச்சாட்டியுள்ளார். 

இத்தகைய செயல் தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது என அசோக் குமார் தெரிவித்துள்ளார். குழந்தைகளை எந்த வகையிலும் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தக்கூடாது என்ற பல சட்ட விதிகள் உள்ளபோதும், அவை மீறப்பட்டுள்ளன எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது குழந்தை தொழிலாளர் சட்டத்திற்கும் எதிரானதாகவும், ஜூவினைல் ஜஸ்டிஸ் சட்டத்தின் பிரிவு 75-ஐவும் மீறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மனுவை பெற்ற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறினார். இதன் நகல்கள் காவல்துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: "உங்க பையன் துரைமுருகன்"..! 11 முறை ஜெயிச்ச பெருமை கிடைக்கும்..! காட்பாடியில் பரப்புரை..!!

மேலும், தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளை பயன்படுத்துவது குறித்து, 2014ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் ‘பூஜ்ய சகிப்புத் தன்மை’ (Zero Tolerance) கொள்கையை தெளிவாக எடுத்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது என்பதே அந்த நிலைப்பாடு என அவர் விளக்கினார்.

அதோடு, ஒரு சிறுவனுக்கு (சுமார் 10–11 வயது) விசில் கொடுத்து ஊதச்செய்ததும் தவறானது என்றும், வீடுதோறும் சென்று விசில் போன்ற பொருட்களை வழங்கியதும் தேர்தல் விதிமுறைகளை மீறும் ‘ஊழல் நடைமுறைகள்’ (corrupt practices) எனவும் அவர் கூறியுள்ளார். இத்தகைய செயல்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் உள்ளதாகவும், சில சந்தர்ப்பங்களில் ஏழு ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

இதனால், தேர்தல் ஆணையம் இவ்வாறான விதிமுறை மீறல்களை தடுக்கவும், தாம் அளித்த புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென அவர் வலியுறுத்தினார். பெற்றோர்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிலர் அறிந்தே குழந்தைகளை அனுப்பியிருக்கலாம், சிலர் அறியாமலே அனுப்பியிருக்கலாம் என்றும், இனிப்புகள் போன்றவற்றை வழங்கி குழந்தைகளை ஈர்த்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார். எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளை இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுத்த வேண்டாம் என பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார்.

குழந்தைகளை வேலைக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது; பெற்றோர்களுக்குக் கூட தங்கள் குழந்தைகளை வேலை செய்ய வைக்கும் உரிமை இல்லை. குழந்தைகளின் கடமை கல்வியே ஆகும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இவ்விவகாரத்தில், ஆதவ் அர்ஜுனாவை தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் போட்டியிட தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் அசோக் குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கான வீடியோ ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் மனு, வில்லிவாக்கம் தொகுதி ரிட்டர்னிங் அதிகாரி மைதிலி அவர்களிடம் நேரடியாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அதை ஆய்வு செய்து பின்னர் நடவடிக்கை குறித்து தகவல் அளிக்கப்படும் என அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாங்க ஆரம்பிச்சா தாங்கமாட்டீங்க... அண்ணாமலைக்கு சவால்விட்ட திமுக வேட்பாளர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share