×
 

விஜய் கட்சியில் கருப்பு ஆடு? ஈரோடு ஸ்பீச் முன்கூட்டியே வெளியானது எப்படி?

ஈரோடு பெருந்துறை நேற்று தவெக தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் எல்லாம்.. அவர் பேசுவதற்கு முன்பே இணையத்தில் லீக்கானது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் டிசம்பர் 18 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) மக்கள் சந்திப்பு கூட்டத்தில், கட்சித் தலைவர் நடிகர் விஜய் பேசிய உரை முழுமையாக இணையத்தில் முன்கூட்டியே கசிந்தது. இது கட்சிக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கி விஜய் பேசவிருந்த நிலையில், அவரது பேச்சுக்கு சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு முன்பே அவரது உரையின் முழு உள்ளடக்கம் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. குறிப்பாக, திமுக ஆதரவு ஐடிக்களில் இருந்து விஜயின் பேச்சு வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பதிவிடப்பட்டது. இதனால் இணையத்தில் பெரும் விவாதங்கள் எழுந்தன.

விஜயின் பேச்சில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் அப்படியே கசிந்ததால், "கவர்ன்மென்டா நடத்துறாங்களா? கண்காட்சியா நடத்துறாங்களா?", "எம்ஜிஆர் - அண்ணா தமிழ்நாட்டின் சொத்து", "உங்களுக்கு காசு துணை, எனக்கு மாஸ் துணை", "தீய சக்தி - தூய சக்தி", "மனப்பாடம் செய்ததை ஒப்பிக்க வருகிறார் உங்கள் விஜய்", "திமுக ஆட்சியும் பிரச்சனைகளும் பெவிகால் போட்டு ஒட்டின பிரண்ட்ஸ் மாதிரி" போன்ற பஞ்ச் டயலாக்குகள் முன்கூட்டியே வெளியாகின.

இதையும் படிங்க: சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படம்!! ஆனால்! ஈரோடு நிகழ்ச்சிக்கு செங்கோட்டையன் கெட்டப் வைரல்!

மேலும், விஜய் ஈரோடு மண்ணைப் புகழ்ந்து பேசிய பகுதியும் கசிந்தது. "பொதுவாக நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் வைத்துதான் ஆரம்பிப்பார்கள். நம் வீட்டில் அம்மா, அக்கா, தங்கைகள் நமக்காக மஞ்சள் கட்டி வேண்டுவார்கள். மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. விவசாயத்துக்கு பெயர் போன மண்" என்று விஜய் பேசினார். 

தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து, "எனக்கு நீங்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்துள்ளீர்கள். நீங்கள் என்ன செய்தாலும் மக்கள் என்னை ஒருபோதும் கைவிட மாட்டார்கள். உங்களை நம்பித்தான் வந்துள்ளேன். வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்" என்று உருக்கமாகப் பேசினார்.

இந்த முழு பேச்சும் வார்த்தை மாறாமல் கசிந்தது கட்சிக்குள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்குள்ளேயே யாரோ இதை லீக் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விஜய் இதுகுறித்து கோபமடைந்துள்ளதாகவும், "கட்சிக்குள் இருக்கும் கருப்பு ஆடு யார்?" என்று கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பேச்சை எழுதிக்கொடுத்தவருக்கு இதில் தொடர்பில்லை என்று நம்பும் விஜய், வேறு யாரோ இதை கசியவிட்டிருக்கலாம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தவெக கட்சியில் உள் பிரச்சனைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. கூட்டத்தில் விஜயின் பேச்சு பெரும் வரவேற்பைப் பெற்ற போதிலும், இந்த லீக் சம்பவம் கட்சி நிர்வாகிகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் மக்கள் முன் விஜய்! அ.தி.மு.க., மாஜிக்கள் இணைய வாய்ப்பு! ரகசியம் காக்கும் நிர்வாகிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share