உங்களுக்கு ரெண்டு சீட்டு! மகனுக்கு எம்.பி போஸ்ட்டு?! ஓபிஎஸ்-யிடம் டீல் பேசிய சேகர்பாபு! கசிந்தது சீக்ரெட் டீல்!
தமிழக சட்டசபை சபாநாயகரின் அறையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸும் அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய சம்பவம் நடந்துள்ளது. சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர், சபாநாயகர் அப்பாவு அவர்களின் அறையில் முன்னாள் முதல்வரும் அதிமுக மூத்த தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் திமுக அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சுமார் 15 நிமிடங்கள் தனிப்பட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அதிமுகவில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், மகன் ரவீந்திரநாத் அவர்களின் அரசியல் எதிர்காலத்தை பாதுகாக்கவும் புத்திசாலித்தனமான முடிவெடுக்கும் கட்டாயத்தில் உள்ளார். அவருடன் தற்போது நெருக்கமாக இருப்பவர்கள் எம்எல்ஏக்கள் ஐயப்பன் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர்தான்.
இவர்களில் ஐயப்பன் த.வெ.க.வில் இணைவதாக வதந்தி எழுந்தபோது அதை உறுதியாக மறுத்து, ஓபிஎஸ்ஸுடன் கடைசிவரை இருப்பேன் என்று தெரிவித்தார். அதேபோல் வெல்லமண்டி நடராஜனும் திமுகவுடன் இணைவார் என பேசப்பட்ட நிலையில், இதுவரை அண்ணா அறிவாலயம் நோக்கி நகரவில்லை.
இதையும் படிங்க: ஹாப்பி 75th பர்த்டே ஓபிஎஸ்!! பிறந்தநாள் கொண்டாடும் ஓ.பன்னீர்செல்வம்!! இன்று கூட்டணி அறிவிக்க வாய்ப்பு!
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக தரப்பு அதிருப்தியில் உள்ளவர்களை தங்கள் அணிக்கு இழுக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே ஓபிஎஸ்ஸுடனான இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. சேகர்பாபு தான் இத்தகைய பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செங்கோட்டையன் போன்றவர்களை திமுகவுக்கு இழுக்க முயன்றாலும் அவர் த.வெ.க.வில் இணைந்துவிட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பை இழுப்பது திமுகவுக்கு தென் மாவட்டங்களில் பெரும் பலத்தை அளிக்கும் என கருதப்படுகிறது.
இந்த 15 நிமிட ஆலோசனையில் ஓபிஎஸ் தரப்பு வைத்த டிமாண்ட்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய விரும்பினால், ஐயப்பன் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகியோருக்கு இரண்டு சட்டசபை தொகுதி சீட்டுகள் வழங்க வேண்டும் என்றும், மகன் ரவீந்திரநாத் அவர்களுக்கு ராஜ்யசபா எம்பி இடம் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோரிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டியதாகவும், தென் மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கை பெருக்க இது உதவும் என கருதியதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இருப்பினும், சில தரப்புகளில் இந்த சந்திப்பு அரசியல் சார்ந்ததல்ல என்றும், சேகர்பாபு தரப்பில் மறுப்பு வெளியாகியுள்ளது. ஆனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், ஓபிஎஸ்ஸின் அடுத்த நகர்வு தமிழக அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் திமுகவுடன் கூட்டணி அமைப்பாரா? அல்லது நேரடியாக இணைவாரா? அல்லது வேறு முடிவெடுப்பாரா? என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும்.
இதையும் படிங்க: விஜய்க்கு மறைமுகமாக உதவும் பாஜக!! ஜனநாயகன் சர்ச்சையின் மற்றொரு பின்னணி! அரசியலில் சகஜமப்பா!