அதிரடி Action-ல் சிங்கப்பெண் படை..! இனி சென்னையில் குற்றங்களுக்கு செக்..!
சென்னையில் சிங்கபெண் சிறப்பு அதிரடிப்படை பணிகள் தொடங்கியது.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் த.வெ.க தலைவர் விஜய் பதவியேற்ற உடனேயே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முக்கிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். அவரது நேரடி கண்காணிப்பில் செயல்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சென்னை உள்ளிட்ட நகரங்களில் தயார் நிலையில் இயங்கத் தொடங்கியுள்ளது.
இந்தப் படை பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் தடுப்பு நடவடிக்கைகள், விரைவான பதில் அளித்தல் மற்றும் பொது இடங்களில் தீவிர கண்காணிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு ஐ.ஜி. தலைமையில் ஒரு எஸ்.பி., இரண்டு டி.எஸ்.பி. மற்றும் நான்கு ஆய்வாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இந்தப் படை, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் முன்னிலை வகிக்கும். சென்னை போலீஸ் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது. ரோந்து வாகனங்களில் பெண் எஸ்.ஐ. தலைமையில் நான்கு போலீசார் கொண்ட குழுக்கள் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றன.
இதையும் படிங்க: கேரளாவில் காங். காட்டிய கிரீன் சிக்னல்... ஆட்சி அமைக்க உரிமைக்கோரிய வி.டி. சதீஷன்..!
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், சந்தைப் பகுதிகள் மற்றும் பொது இடங்கள் போன்ற பெண்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் அதிரடிப்படையினர் தொடர்ச்சியான ரோந்து மேற்கொள்வதுடன், சந்தேகத்திற்குரிய நபர்களை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்கின்றனர். பெண் போலீசார் அதிக அளவில் இணைக்கப்பட்டுள்ள இந்தப் படை, பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது. புகார்கள் வந்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இதையும் படிங்க: விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!