×
 

“அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

185 ஆண்டு ஆவணங்கள் அனைத்தும் தங்களிடம் உள்ளதாக நிலத்தை விற்பனை செய்தவர்கள் தகவல்

ஓய்வு பெற்ற நீதிபதி குடும்பத்திடம் இருந்து இந்த இடம் வாங்கப்பட்டது வருவாய்த்துறை இந்து சமய அறநிலையத்துறை ஆவணங்களின்படி அது கோவிலின் நிலம் அல்ல என உறுமையாளர் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் கூட்டாக பேட்டி.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்து போலியாக பத்திரம் போட்டு அபகரித்து விட்டார் என்ற குற்றச்சாட்டிற்கு நிலத்தின் உரிமையாளர் ராம்குமார்  அவரது வழக்கறிஞர்கள் சக்திகுமார் மற்றும் வழக்கறிஞர் அமலான் செய்தியாளர் சந்திப்பு.

ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தை  திருச்சி ஸ்ரீரங்கத்தை சார்ந்த ராம்குமார் என்பவர்  50 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலியாக பத்திரம் பதிவு செய்து உள்ளார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார் மேலும் கோவிலின் செயல் அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராம்குமார் உள்ளிட்டோர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: #BREAKING ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி விவகாரத்தில் அதிரடி திருப்பம்... திமுக பிரமுகருக்கு இடியை இறக்கிய போலீஸ்...!

இந்நிலையில் கோவில் நில விவாகரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து நிலத்தை வாங்கிய ராம்குமார் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் கூட்டாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அதில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சர்வே எண் 762/1 என்ற சர்வே எண்ணின் 17 செண்ட் நிலத்தை பாண்டிச்சேரி பூர்வமாக கொண்ட மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற வெங்கடராமன் மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து 2024 ஆம் ஆண்டு 2 கோடியே 90 லட்சம் காசோலையாக கொடுத்து இடத்தை வாங்கினேன் அதற்கு பத்திர பதிவு முத்திரை கட்டணமாக 30 லட்சம் ரூபாய் கொடுத்து இடத்தை பதிவு செய்தேன்.

அந்த நிலம் கோவில் நிலம் என்றால் பத்திர பதிவு செய்திருக்க முடியாது ஜீரோ மதிப்பீட்டில் வைத்திருப்பார்கள் ஆனால் அந்த இடத்திற்கு சதுர அடி 1474 ரூபாய் என அரசு நிர்ணயத்தை இருந்தது அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது.

மேலும் நான் இடம் வாங்கியது ரியல் எஸ்டேட் நபர்களிடமோ அல்லது மோசடி பேர்வழிகளிடமோ இல்லை ஒரு பாரம்பரியமான நீதிபதி அவர்களது குடும்பத்திடம் இருந்து வாங்கினேன் அவரது தம்பி சிபிஐ வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் அவரது சகோதரிகள் விஞ்ஞானியாக உள்ளனர் அவ்வாறு உள்ள சூழலில் எந்த புரிதலும் இல்லாமல் அமைச்சர் எங்கள் மீது அவதூறான கருத்துக்களை தெரிவித்தது மட்டுமல்லாமல் பொய்யாக புகார் கொடுக்க வைத்து வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளனர்.

மேலும் கடந்த வருடம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த இடம் கோவில் நிலம் என அறிவிக்க கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது அந்த வழக்கு விசாரணையின் போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இந்த நிலம் கோவில் நீளம் இல்லை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர் அதற்கான ஆவணங்களும் உள்ளது.

இது மட்டுமில்லாமல் இந்த நிலம் வாங்கியதில் முறைகேடு என லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் காவல்துறையிடம் ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி எந்த முறைகேடும் இல்லை என புகாரை முடித்து வைத்தனர்.

மேலும் 180 வருடங்களுக்கான மூல பத்திர ஆவணங்கள் தங்களிடம் உள்ளது என்றும் கோவில் நிலம் இல்லை என்பதற்கான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட ஆவணங்கள் உள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை கோவில் நிலம் இல்லை என்று தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் உள்ளது இவ்வாறு உள்ள சூழலில் நான் திமுக கட்சியை சார்ந்தவன் என்பதாலும் அரசியல் ரீதியாக திமுக மீது அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என முடிவு செய்து இதுபோன்று அவதூறுகளை அமைச்சர் தெரிவித்துள்ளார் இது குறித்து நீதிமன்றத்தில் முறைப்படி சட்டரீதியாக நாங்கள் சந்திப்போம் என உரிமையாளர் ராம்குமார் தெரிவித்தார்.

அவரது வழக்கறிஞர் சக்தி குமார் தெரிவிக்கையில் தாவேக் அரசு பொறுப்பேற்ற பின்பு அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு சம்பவம் நடைபெற்றால் அதை திசை திருப்பும் நோக்கில் இதுபோன்று மாற்று வலியை தேர்வு செய்கின்றனர் மீனாட்சி அம்மன் கோவில் குடமுழக்கின் போது டிக்கெட் பிளாக்கில் வித்தது தற்போது பேசும் பொருளாக உள்ளது இதனை மடைமாற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் திமுக மீது அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார் கோவில் நிலம் எது என்பதே அமைச்சருக்கு தெரியாது முருக்கு பாக்கெட் எப்பொழுது தயாரித்தது என்பதற்கான ஆதாரத்தை கேட்டவர் தான் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் எனவே இந்த விவகாரத்தை நாங்கள் சட்டரீதியாக சந்திக்க உள்ளோம் என தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share