×
 

#BREAKING ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி விவகாரத்தில் அதிரடி திருப்பம்... திமுக பிரமுகருக்கு இடியை இறக்கிய போலீஸ்...!

திமுக கட்சி அலுவலகம் நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி தொடர்பாக திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.50 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை மோசடியாக தனது பெயருக்கு மாற்றி, அங்கு திமுக கட்சி அலுவலகம் நடத்தி வருவதாக புகார் எழுந்த நிலையில், திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.50 கோடி மதிப்பிலான ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மோசடியாக தனது பெயருக்கு மாற்றி, அதில் திமுக கட்சி அலுவலகம் நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் திமுக செயலாளர் ராம்குமார் என்பவர் கடந்த 2022ஆம் ஆண்டு தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ராதாகிருஷ்ணனுக்கு புதிய பொறுப்பு... மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம்... தமிழக அரசு அறிவிப்பு..!!

கோயில் நிலத்தை தனது பெயருக்கு மாற்றியதோடு மட்டுமல்லாமல், அந்த இடத்தில் திமுக கட்சி அலுவலகத்தையும் இன்றளவும் நடத்தி வருவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த திமுக பிரமுகரின் மனைவி வார்டு கவுன்சிலராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட திமுக பிரமுகர் மீது எஃப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இணை ஆணையர் மூலம் சம்பந்தப்பட்ட இடத்தில் எந்தவிதமான பத்திரப்பதிவும் மேற்கொள்ளக்கூடாது என சார்பதிவாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

விரைவில் இந்த திமுக பிரமுகர் கைது செய்யப்படுவாரா, இந்த விவகாரத்தின் பின்னணியில் அமைச்சர்கள் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, கோயில் நிலத்தை எவ்வாறு கையகப்படுத்தி இத்தனை ஆண்டுகளாக அங்கு திமுக அலுவலகத்தை நடத்த முடிந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: லண்டன் ட்ரிப் சர்ச்சையே முடியல... மீண்டும் வெளிநாடு பறக்கும் சி.எம்.விஜய்... எந்த நாடு? எப்போது தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share