அமைதியா போறது.. அநாகரீகம் தவிர்க்க தான்..! ஆ. ராசாவை பூந்து விளாசிய S.S. பாலாஜி..!
விசிக மற்றும் IUML கட்சிகளை விமர்சித்த ஆ.ராசாவிற்கு விசிக பொருளாளர் எஸ். எஸ். பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
2026 தேர்தலுக்குப் பிறகு, தவெக 108 இடங்களை வென்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் முழு பெரும்பான்மைக்கு சில இடங்கள் குறைவாக இருந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடியது. விசிக மற்றும் IUML ஆகியவை முதலில் திமுக கூட்டணியின் பகுதியாக இருந்தபோதும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்தன. இந்த ஆதரவு தவெக அரசை உறுதிப்படுத்த உதவியது.
தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் இந்த இரு கட்சிகளும் இணைவது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்தன. தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் விசிக மற்றும் IUML-க்கு அமைச்சர் பதவி அளிக்க திறந்த மனதுடன் அழைப்பு விடுத்தனர். இது சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை அடிப்படையிலான உள்ளடக்கிய அரசை உருவாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து IUML தரப்பில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எம். ஷாஜகான், விசிக தரப்பில் திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. வண்ணி அரசு ஆகிய இருவரும் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். இதனை திமுக எம். பி. ஆ.ராசா கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இந்த நிலையில், விசிக பொருளாளர் S.S. பாலாஜி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அமைதியாக போவது அநாகரீகம் தவிர்க்க தான் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏணியும், சிறுத்தையும் விசிலுக்கு முட்டுக் கொடுக்குது...! ஆ.ராசா விமர்சனம்..!
அவரது பதிவில், அதிகாரம் எளியவர்க்கு. அதிலென்ன ஆத்திரம்.? என்று கேட்டுள்ளார். ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது என்றும் கூறினார். அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே என்றும் அநீதி தொடர்ந்து அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தவெக அமைச்சரவை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு எம்பி கனிமொழி கண்டனம்!