பீகார் தேர்தலில் மோடி போட்ட அதே ஸ்கெட்ச்!! தமிழகத்தில் ரீப்பீட்! பாஜக பொருளால் அவர்களையே வச்சு செய்த ஸ்டாலின்!
பீகார் சட்டசபைத் தேர்தலின் போது மகளிரின் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் பாஜக வரவு வைத்திருந்த சூழலில், அதே பாணியில் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் வரவு வைத்திருக்கிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் மாடலைப் போலவே தேர்தல் களத்தில் காய் நகர்த்தியுள்ளார். பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி, பெண்களுக்கு ரூ.10,000 வழங்கி மகத்தான வெற்றி பெற்ற சூழலில், தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இம்மாதம் ரூ.5,000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் முன்பான அரசியல் உத்தியாக பார்க்கப்படுகிறது.
பீகாரில் முதல்வர் நிதீஷ் குமார் மீது அதிருப்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பிரச்சினை, உள்கட்டமைப்பு சிக்கல்கள் இருந்தபோதும், என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளில் வென்றது. தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு கட்டத் தேர்தலிலும் இந்தத் தொகை வங்கிகளில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் பெண்களின் ஆதரவை பாஜக பெற்றது. அப்போதே தமிழகத்தில் மத்திய அரசு இதுபோல் ரூ.10,000 கொடுக்குமா என கேள்வி எழுந்தது.
இதையும் படிங்க: 2 நாள் பயணம்!! இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா!! திருச்சி பாஜகவினர் உற்சாகம்!!
இந்நிலையில், தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தேர்தல் விதிகளால் முடக்க முயலலாம் என்பதை உணர்ந்த ஸ்டாலின், முன்கூட்டியே நடவடிக்கை எடுத்துள்ளார். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.3,000 உரிமைத் தொகையும், கோடை கால சிறப்பு தொகுப்பாக ரூ.2,000 உம் சேர்த்து ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது. இது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க தடை என்ற விதியை சமாளிக்கும் வகையில் உள்ளது.
ஏற்கனவே பொங்கல் பண்டிகையின்போது ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ.3,000 வழங்கப்பட்டது. இதனால் கடந்த 3 மாதங்களில் மட்டும் தமிழக அரசு ரூ.8,000 கொடுத்துள்ளது. இது பெண் வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தேர்தல் காலத்தில் இத்திட்டம் முடக்கப்பட்டாலும், முன்கூட்டிய தொகை அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
திமுகவின் இந்த உத்தி, பீகார் போல தமிழக தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் ஆட்டத்தை அப்படியே காப்பி அடித்து, ஸ்டாலின் தனது வியூகத்தை வகுத்துள்ளார்.
இது எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக அமையும். தமிழக அரசியலில் இந்த நகர்வு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், பெண்களின் ஆதரவு யாருக்கு என்பது இப்போது சூடுபிடிக்கும் விவாதமாக உள்ளது.
இதையும் படிங்க: பிப்.,14-ல் தமிழகம் வருகிறார் அமித்ஷா?! பாஜக மையக்குழு கூட்டம்! எடுக்கப்போகும் முக்கிய முடிவு?