×
 

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் முறைகேடு!! களம் இறங்கிய நீதிபதிகள்! தேர்தல் கமிஷனுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி!

மேற்கு வங்கத்தில் 58 லட்சம் போலி வாக்காளர்களின் பெயரை நீக்கி தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்தது. மேலும், பெயரில் பிழைகள் உள்ளிட்ட சில காரணங்களை சுட்டிக் காட்டி, 1.38 கோடி வாக்காளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த பணி (Special Intensive Revision - SIR) மேற்கு வங்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR மூலம் வாக்காளர் பட்டியலை சுத்திகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் 58 லட்சம் போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளது. மேலும், பெயர்களில் பிழைகள், முகவரி தவறுகள் உள்ளிட்ட காரணங்களால் 1.38 கோடி வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்து மேற்கு வங்க அரசும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

திரிணாமுல் காங் தரப்பில், சட்டசபை தேர்தலை குறிவைத்து SIR மூலம் மேற்கு வங்கத்தை குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரடியாக ஆஜராகி வாதாடினார். தேர்தல் ஆணையம் தரப்பில், மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை, அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர் என புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ராகுல்காந்தி தலையில் பேரிடி! ஓங்கி ஒலிக்கும் ஸ்டாலின் பெயர்! காங்கிரசுக்கு எதிராக திரளும் எதிர் கட்சிகள்!!

இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. ஏற்கனவே சில இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நேற்றைய விசாரணையில் முக்கிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் கூறியதாவது: “SIR பணியை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும், அரசியலமைப்பின் கீழ் இயங்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையே முரண்பாடு உள்ளது. 

இரு தரப்பும் மாறி மாறி புகார்கள் அளிக்கின்றன. இதை சரிசெய்ய தற்போது பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளை கண்காணிப்பு அதிகாரியாக நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை.”

முரண்களை களையவும், விடுபட்ட வாக்காளர் பெயர்களின் உண்மைத்தன்மையை ஆராயவும், மாநில அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் இந்த நீதிபதிகளுக்கு உதவ வேண்டும். நீதிபதிகளை நியமிக்கும் பணியை கொல்கத்தா உயர் நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும். இதனால் வழக்குகள் தேங்காமல் இருக்கும் என்பதை உணர முடிகிறது.

தற்போதைய சூழலில் SIR பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உறுதியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மேற்கு வங்கத்தில் SIR பணி தொடரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு பெரும் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: போலி வாக்காளர்களை களையெடுக்கும் பணி தீவிரம்!! எஸ்ஐஆர் முன்னேற்பாடு! 22 மாநிலங்களுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share