×
 

யார் இந்த சுவேந்து அதிகாரி!! மம்தாவின் முன்னாள் தளபதி!! பாஜக வெற்றிக்கு வித்திட்டது எப்படி?

மேற்கு வங்கத்தில், 15 ஆண்டு கால திரிணமுல் காங்., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, முதல் முறையாக பா.ஜ., அரியணை ஏறியது. முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றா

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 15 ஆண்டுகால திரிணமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, முதல் முறையாக பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் அரியணை ஏறியுள்ளது. 

பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் தகுதியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, புதிய அரசின் பதவியேற்பு விழா இன்று (மே 9) கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் கிரவுண்டில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பாஜகவின் சுவேந்து அதிகாரி மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார். மாநில கவர்னர் ஆர்.என். ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்ட மத்திய, மாநில பாஜக தலைவர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரியை வாழ்த்தினர்.

இதையும் படிங்க: மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து!

யார் இந்த சுவேந்து அதிகாரி?
ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த சுவேந்து அதிகாரி, 2020 டிசம்பரில் பாஜகவில் இணைந்தார். 2021 சட்டசபைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியையே நேரடியாக எதிர்த்து தோற்கடித்து தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். 2026 தேர்தலிலும் மம்தாவின் கோட்டையாகக் கருதப்படும் பவானிபூர் தொகுதியில் மீண்டும் அவரை வீழ்த்தி பாஜகவின் அமோக வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் மேற்கு வங்கம் புதிய பாதையில் செல்லும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வெற்றி கிழக்கு இந்தியாவில் பாஜகவின் வலிமையை மேலும் உயர்த்தியுள்ளது. 

இதையும் படிங்க: சுவெந்து அதிகாரி உதவியாளர் மரணத்தில் கூலிப்படை தொடர்பு? தனிப்படை விசாரணை தீவிரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share