×
 

வெள்ளி, திங்கட்கிழமை எலெக்‌ஷன் வேணாம்!! தேஜ கூட்டணி கட்சிகள் வித்தியாச விருப்பம்! பரிசீலிக்குமா தேர்தல் ஆணையம்?!

'தமிழக சட்டசபை தேர்தலை, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை நடத்த வேண்டாம்' என, அ.தி.மு.க., -- பா.ஜ., - -பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்த உள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இம்மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு நாளை சென்னை வருகிறது. அரசு அதிகாரிகள், கலெக்டர்கள், எஸ்.பி.க்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.

இந்நிலையில், தேர்தல் ஓட்டுப்பதிவு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை நடத்தப்படக் கூடாது என அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளன. இந்த கோரிக்கையை சென்னை வரும் தேர்தல் ஆணையர்களிடம் நேரடியாக முன்வைக்க உள்ளனர்.

இதையும் படிங்க: டிடிவி, எடப்பாடியை வீழ்த்த வியூகம்!? விஜயுடன் கைகோர்க்கும் சசிகலா! தென் தமிழகத்தில் பலம் சேர்க்கும் கூட்டணி!

அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், திங்கள் அல்லது வெள்ளிக்கிழமை தேர்தல் நடந்தால், தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதனால் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகர்ப்புறங்களில் வசிக்கும் தொழிலாளர்கள், மாணவர்கள், பணியாளர்கள் ஓட்டு போடாமல் சொந்த ஊருக்கு சென்று விடுகின்றனர். இதனால் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த 2024 லோக்சபா தேர்தல் வெள்ளிக்கிழமை நடந்தபோது, சென்னை, கோவை போன்ற இடங்களில் ஓட்டுப்பதிவு கணிசமாக குறைந்தது. இதை உதாரணமாகக் காட்டி, இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இதே பிரச்சினை ஏற்படக் கூடாது என்கின்றனர். பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், திங்கள், வெள்ளி மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமையும் தேர்தல் நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துவோம் என்றார்.

இந்த கோரிக்கை தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற வாக்காளர்களின் பங்கேற்பு அதிகரிக்க இது உதவும் என எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. ஆனால், தேர்தல் ஆணையம் இதை ஏற்குமா என்பது இனி தெரியவரும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறும். வாக்காளர்களின் வசதியை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. இந்த வலியுறுத்தல் தமிழக தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விஜயகாந்த் செய்த அதே தவறு! வாய்ப்புகளை வீணடிக்கும் பிரேமலதா! தேமுதிக அவ்வளவுதானா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share