×
 

மோடி, மத்திய அரசுக்கு எதிராக திமுக சதிவலை! மௌனம் காக்கும் தமிழக பாஜக தலைவர்கள்! தொண்டர்கள் அதிருப்தி!

'சமையல் காஸ், பெட்ரோல் தட்டுப்பாடு என வதந்தி வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க, தமிழக பா.ஜ., தலைவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது, அக்கட்சி தொண்டர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சமையல் காஸ், பெட்ரோல் தட்டுப்பாடு என்ற வதந்தி வேகமாக பரவி வருவதால் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர். இரு வாரங்களாக ஈரான்-இஸ்ரேல் போர் நீடித்து வரும் நிலையில், கடந்த 9ஆம் தேதி முதல் இந்த வதந்தி தீவிரமடைந்தது. தி.மு.க.வினரும் கூட்டணி கட்சியினரும் “மத்திய பா.ஜ.க. அரசும் பிரதமர் மோடியும் முன்னேற்பாடு செய்யவில்லை, மக்கள் அவதிப்படுகின்றனர்” என்று பெரிதுபடுத்தி பரப்பினர்.

இதனால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் சமையல் காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்தனர். பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கும் மக்கள் குவிந்தனர். ஆனால் உண்மையில் சமையல் காஸ், பெட்ரோல், டீசலுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. வதந்தி காரணமாகவே செயற்கையாக தட்டுப்பாடு உருவானது. தேவைக்கு அதிகமாக மக்கள் குவிந்ததால் விநியோகத்தில் சிரமம் ஏற்பட்டது.

இந்த உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்தி வதந்தியை தடுக்க தமிழக பா.ஜ.க. தலைவர்கள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.

இதையும் படிங்க: இபிஎஸ் பேச்சை கண்டுகொள்ளாத மா.செ-க்கள்!! அதிமுகவில் நிலவும் அதிருப்தி! சுணங்கும் தேர்தல் பணி!

“காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை, நானே ஒரு டீலர் தான்” என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சமாளிக்க முயன்றாலும், பலர் அதை ஏற்கவில்லை.

பிரதமர் மோடி திருச்சியில் “மேற்காசிய போரால் அச்சப்பட வேண்டாம், எரிபொருள் விநியோகம் சீராக உள்ளது” என்று பேசியதை கூட தமிழக பா.ஜ.க.வினர் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்று கட்சி தொண்டர்கள் புலம்புகின்றனர். “எங்கள் கட்சி தலைமை மௌனமாக இருப்பது ஏன்? வதந்தியை எதிர்கொள்ள ஏன் முயற்சி எடுக்கவில்லை?” என்ற கேள்வி பா.ஜ.க. தொண்டர்களிடையே வலுத்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து வதந்தியை கட்டுப்படுத்தவும், எரிபொருள் விநியோகம் சீராக உள்ளது என்பதை தெளிவுபடுத்தவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வதந்தி காரணமாக ஏற்பட்ட செயற்கை தட்டுப்பாடு விரைவில் சரியாகும் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: எந்த நேரத்திலும் கூட்டணி உடையலாம்! தவெகவுக்கு சிக்னல் தரும் தேசிய கட்சி!! விஜய் ரூட் வேற மாதிரி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share