×
 

வீடு, வீடாக ரூ.8000 இல்லதரசி கூப்பன் விநியோகம்! திமுகவுக்கு தேர்தல் கமிஷன் கடும் கண்டிப்பு!

ரூ.8 ஆயிரம் கூப்பன் மாடல் வினியோகத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி பெற்றுள்ளதாக திமுக பிரசாரம் செய்வது உண்மைக்கு புறம்பானது; தவறாக வழி நடத்தக்கூடியது என தேர்தல் கமிஷன் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

சென்னை: தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த ‘இல்லத்தரசி திட்டம்’ மூலம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார்.

தி.மு.க.வினர் வீடு வீடாகச் சென்று இந்த ரூ.8,000 கூப்பன்களை வினியோகம் செய்து வருகின்றனர். பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினரிடம் இத்தகைய கூப்பன்கள் பிடிபட்டுள்ளன. சில இடங்களில் எதிர்க்கட்சியினர் இந்தக் கூப்பன் வினியோகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில், “ரூ.8,000 கூப்பன் மாடல் வினியோகம் செய்ய இந்தியத் தேர்தல் கமிஷனிடம் முறையான அனுமதி பெற்றுள்ளது தி.மு.க. மாற்றுக் கட்சியினர் பிரச்னை செய்தால் அனுமதி நகலைக் காட்டுங்கள்” என்று பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுடன் அனுமதி கடிதம் என்று கூறி ஒரு ஆவணத்தையும் இணைத்திருந்தார்.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்! சொத்துக்கணக்கில் பிழை?! வருமான வரித்துறைக்கு கோர்ட் உத்தரவு!

இந்தப் பதிவுக்கு உடனடியாக பதில் அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, “மின்னணு ஊடகங்களில் (Electronic Media) உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்தச் சான்றிதழ், அச்சிடப்பட்ட பிரசுரப் பொருட்கள், துண்டுப் பிரசுரங்கள் அல்லது கைப்பிரதிகளுக்கு (handbills) பொருந்தாது” என்று தெளிவுபடுத்தினார்.

மேலும், “அத்தகைய அச்சிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 127A மற்றும் நடைமுறையில் உள்ள மாதிரி நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். தேர்தல் கமிஷன் அனுமதி பெற்றுள்ளதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியது” என்று தலைமை தேர்தல் அதிகாரி வலியுறுத்தினார்.

தி.மு.க.வின் ‘இல்லத்தரசி திட்டம்’ கூப்பன் வினியோகம் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் ஏற்கனவே குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில், தலைமை தேர்தல் அதிகாரியின் இந்தத் தெளிவுபடுத்தல் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் உள்ள வேளையில், கூப்பன் வினியோகம் தொடர்பான சர்ச்சை தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் தேர்தல் பறக்கும் படைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படிங்க: பொண்ணுனு கூட பாக்கமா இவ்ளோ ஆபாசமா? உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்! திமுகவை வெளுக்கும் அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share