×
 

காங்கிரஸ் மாவட்ட தலைவர்களாக களமிறங்கும் ஜூனியர்கள்! எம்.எல்.ஏ சீட்டுக்கு கனவு கண்ட சீனியர்களுக்கு கல்தா!!

தமிழக காங்.,ல் புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்தால், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட எம்.எல்.ஏ., சீட்டு பெற்றுவிடலாம் என கனவில் இருந்த சீனியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை: தமிழக காங்கிரஸில் பெரும் நிர்வாக மாற்றம்! கட்சியை பலப்படுத்தும் நோக்கில் 71 மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட தலைவர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. இதில் 90 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கட்சியில் உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பல ஆண்டுகளாக மாவட்ட தலைவர்களாக இருந்த சீனியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாடு முழுவதும் பாஜகவின் தொடர் வெற்றிகளால் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய அகில இந்திய காங்கிரஸ் சிறப்பு பொறுப்புக் குழு அமைத்தது. இக்குழு வட்டார அளவிலான நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, புதிய தலைவர்கள் பட்டியலை தயாரித்து டெல்லி தலைமைக்கு அனுப்பியது.

அதை ஏற்று, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்றுமுன்தினம் (ஜனவரி 18, 2026) 71 மாவட்டங்களுக்கான புதிய மாவட்ட தலைவர்கள் பெயர்களை வெளியிட்டார். இந்த பட்டியலில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் இதை வரவேற்று உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!! கூடலூரில் நிகழ்ச்சி! கூட்டணி குறித்தும் ஆலோசனை!!

ஆனால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த அறிவிப்பு சீனியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பதவியிழந்த சீனியர்கள் கூறுகையில்: ஆனால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த அறிவிப்பு சீனியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பதவியிழந்த சீனியர்கள் கூறுகையில்:

"புதிய தலைவர்களுக்கு பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் ஏற்பாடுகள் செய்வது போன்ற அனுபவம் குறைவு. மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், சீனியர்களை ஏற்கனவே மதிப்பதில்லை. இப்போது ஜூனியர்களை எப்படி மதிப்பார்கள்?"

"மாவட்ட தலைவர் பதவியில் இருந்தால் எம்எல்ஏ டிக்கெட் வாய்ப்பு அதிகம். இப்போது பதவியிழந்த பிறகு சீட் கிடைக்குமா என்பது சந்தேகமே. தேர்தல் நேரத்தில் கூட்டங்கள், பிரசார ஏற்பாடுகளில் இந்த பாதிப்பு எதிரொலிக்கும்."

தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட இந்த பெரும் மாற்றம் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் தயாரிப்புகளை எப்படி பாதிக்கும்? சீனியர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினால் கட்சியில் பிளவு ஏற்படுமா? அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: வார்த்தைகளில் வெடித்த ஜோதிமணி! டெல்லி தலைமையின் விருப்பமும் அதுதான்! பற்றவைக்கும் வேலுச்சாமி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share