ரூ.10.62 லட்சம் கோடிப்பே!!! அம்மாடியோவ்!! தாறுமாறாக அதிகரிக்கும் தமிழக அரசின் கடன்! இடைக்கால பட்ஜெட்?!
வரும் 2026-27ம் ஆண்டில் தமிழக அரசின் கடன் 10.62 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்ரவரி 17, 2026) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இந்த அறிக்கையில் புதிய திட்ட அறிவிப்புகள் இல்லை. மாறாக, அரசின் சாதனைகள், நடப்பு திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் வரும் 2026-27 நிதியாண்டுக்கான நிதி மதிப்பீடுகள் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
மிக முக்கியமாக, 2026-27 நிதியாண்டில் மாநில அரசின் மொத்த கடன் 10.62 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இது 9.52 லட்சம் கோடியாக உள்ளது. இதில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கடன் தவிர்த்து பார்த்தால் கடன் அளவு 26.12 சதவீதமாக (GSDP-யை ஒப்பிடுகையில்) இருக்கும். அரசு நிதி ஒழுங்குமுறை சட்டத்தின்படி நிதிப் பற்றாக்குறை 3 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அரசின் சாதனைகளை எடுத்துரைத்த அறிக்கையில், சோழர் அருங்காட்சியகம், நொய்யல் அருட்காட்சியகம், எழும்பூர் வெண்கல அருங்காட்சியகம், திருவண்ணாமலை தமிழர் பண்பாடு அருங்காட்சியகம் ஆகியவை ரூ.287 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு 3 கட்டங்களாக ரூ.630 கோடியில் வீடுகள் கட்டித் தரப்படும். தமிழகத்தில் 10,649 புதிய வீடுகள் கட்டப்படும். தூய்மை பணியாளர்களுக்கு மேலும் 30 ஆயிரம் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சிக்கல்! இடம் பார்த்து ஆப்பு வைத்த பாஜக!
தொன்மையான பள்ளிவாசல்கள், தர்காக்கள் மேம்பாட்டுக்கு ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறை ரூ.327 கோடியிலும், மதுரை மத்திய சிறை ரூ.229 கோடியிலும் புதிய இடத்துக்கு மாற்றப்படுகிறது.
அம்பேத்கர் உயர் கல்வி திட்டத்தின் கீழ் ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 385 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு.
19 முக்கிய கோவில்களில் ரூ.1,770 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1000 ஆண்டுகள் பழமையான 84 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ரூ.425 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. 2024-ல் 30.79 கோடி சுற்றுலா பயணிகள் வந்து தமிழகம் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.214 கோடியில் உணவு வழங்கும் திட்டம் இந்தியாவில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடமிருந்து ரூ.24 ஆயிரம் கோடி நிதி மானியங்கள் வரவேண்டியுள்ளது. பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத் தொகை திட்டங்களால் ரூ.10,849 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் முன்னுரிமை துறைகளுக்கு ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட் என்பது அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் அறிக்கை மற்றும் இடைக்கால நிதிக்கு ஒப்புதல் கோரும் ஆவணம் என அரசு தெரிவித்துள்ளது. எனவே புதிய திட்ட அறிவிப்புகள் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தேர்தல் முன் அரசின் செயல்பாடுகளை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு..! பனையில் குட்டை ரகம்... முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..!