×
 

கார் கேட்ட எம்எல்ஏக்கள்! தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அம்பலமான சொத்து மதிப்பு! அடுத்த சர்ச்சை!

அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் டொயோட்டா, வோக்ஸ்வேகன், மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட நான்கு கார்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார், ஓட்டுநர், மாதம் ரூ.75 ஆயிரம் வாகனப் படி மற்றும் அலுவலகப் பணிகளுக்கு உதவியாளர் நியமிக்க மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பின்னர், காருக்கான கோரிக்கையை முன்வைத்த விசிக எம்எல்ஏ ஜோதிமணி உள்ளிட்ட சில உறுப்பினர்களின் தேர்தல் பிரமாணப் பத்திர சொத்து விவரங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

சட்டப்பேரவையில் கடந்த வாரம் பேசிய காட்டுமன்னார்கோவில் விசிக எம்எல்ஏ ஜோதிமணி, தனது தொகுதி சென்னையில் இருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் இருப்பதாகவும், தொகுதி மக்களை சந்தித்து பணியாற்றுவதற்கு போதிய வாகன வசதி இல்லை என்றும் தெரிவித்திருந்தார். சொந்த வாகனம் இல்லாததால் வாடகை வாகனத்தை பயன்படுத்துவதாகவும், எம்எல்ஏக்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் மற்றும் ஓட்டுநர் வழங்குவதுடன், வாகனச் செலவுகளுக்காக மாதம் ரூ.75 ஆயிரம் படித்தொகையும், அலுவலக உதவியாளர் நியமிக்க மாதம் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என அவர் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு எம்எல்ஏக்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நீங்க அத கவனீச்சீங்களா?! அமித்ஷாவுக்கு முதல்வர் விஜய் கொடுத்த கிஃப்ட்! மூடிய பையில் கொடுத்த பரிசு என்ன?

இதனிடையே, கார் தொடர்பான கருத்துகளை தெரிவித்த மூன்று எம்எல்ஏக்களின் சொத்து விவரங்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன. மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏ சண்முகன், தனக்கு இன்னோவா கார் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.

அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் டொயோட்டா, வோக்ஸ்வேகன், மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட நான்கு கார்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.37.52 கோடி எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன், தற்போது ஆட்டோவில் வருவதாக சட்டப்பேரவையில் கூறியிருந்தார். அவரது பிரமாணப் பத்திரத்தில் டாடா டிகோர் கார் இருப்பதாகவும், மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.72.76 லட்சம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் ஜோதிமணியின் பிரமாணப் பத்திரத்தில் டொயோட்டா எட்டியோஸ் கார் இருப்பதாகவும், மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.85.47 லட்சம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளையில், தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகள் மற்றும் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் தெரிவித்த வாகன வசதி குறித்த கோரிக்கைகளை நேரடியாக ஒப்பிட்டு முடிவு செய்வது சரியானதல்ல. புதிய அரசு அறிவிப்பு நடைமுறைக்கு வந்த பிறகே அதன் உண்மையான செலவு மற்றும் பயன்பாடு குறித்த முழுமையான படம் தெரியவரும்.

இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை! ராஜ்யசபா செயலகம் அறிவிப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share