×
 

அதிருப்தியில் அண்ணாமலை?! தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்! பாஜக தேசிய தலைவர் உடைத்த உண்மை!!

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் உங்களை ஆச்சரியப்படுத்தும் என்று பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

புதுடில்லி: தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமையும் என தெளிவான அறிகுறிகள் இருப்பதாக பாஜ தேசியத் தலைவர் நிதின் நட்கினி (நிதின் நபின்) தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் தேர்தல் முடிவுகள் பலரையும் ஆச்சரியப்படுத்தும் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் பேசிய நிதின் நட்கினி, “அண்ணாமலை லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். நேற்றும் பிரசாரத்தில் பங்கேற்றார். கட்சியில் எங்கும் அதிருப்தி இல்லை. பாஜ மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்து என்டிஏ கூட்டணிக் கட்சிகளும் மரியாதையுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன. தமிழகத்தில் பாஜ 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “திமுகவின் ஊழல் மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் தெரிகின்றன. என்டிஏ ஆட்சி அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: மயிலாப்பூரில் மாற்றத்தின் அலை..! தமிழிசைக்கு ஆதரவாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் வாக்குச் சேகரிப்பு..!!

திமுகவினர் பாஜ அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியில் இல்லை என்று கூறுவதை சுட்டிக்காட்டிய நிதின் நட்கினி, “வடகிழக்கு மாநிலங்களில் முதலில் வளர்ச்சியை கொண்டு வந்த பிறகுதான் ஆட்சி அமைந்தது. கேரளாவுக்கு மெட்ரோ திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பாகுபாடின்றி நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இது பிரதமர் மோடியின் தலைமையின் சிறப்பு” என்றார்.

கேரளா, தமிழகத்தில் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்த அவர், “இவர்கள் நாடு முழுவதும் ‘மேட்ச்-பிக்சிங்’ விளையாட்டு விளையாடுகின்றனர். ஆனால் கேரள மக்களுக்கு இது நன்றாகத் தெரியும். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களை பாஜ வெளிப்படையாக தகர்த்து வருகிறது. எதிர்காலத்தில் அவற்றை முற்றிலும் அகற்றுவோம். காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பதே எங்கள் கனவு” என்று கூறினார்.

சபரிமலை பிரச்சினையில் ராகுல் காந்தி எப்போதாவது பேசியதுண்டா? என்று கேள்வியும் எழுப்பினார். நிதின் நட்கினியின் இந்த உறுதியான பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை நோக்கி அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டுல காங்., கட்சி எங்க இருக்கு?! யாருக்குமே தெரிலயே! நயினார் நாகேந்திரன் கிண்டல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share