தமிழ்நாடு மட்டுமல்ல!! விஜயின் சீக்ரெட் ப்ளான்! தென்மாநிலங்கள் முழுவதுமே கால் பதிக்க தயாராகும் தவெக!
தமிழகம், புதுச்சேரியை தொடர்ந்து, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களிலும் கால் பதிக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.,) தற்போது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலும் வேரூன்றத் தயாராகி வருகிறது. 2024 பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, தமிழக சட்டசபைத் தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு, இப்போது தென் இந்தியா முழுவதும் தன் செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
த.வெ.க.,வுக்கு புதுச்சேரியிலும் ஏற்கெனவே இரண்டு தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ள கட்சி, இனி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தீவிரமாக இயங்கத் திட்டமிட்டுள்ளது. சினிமா காலத்தில் இருந்து விஜய் மக்கள் இயக்கம் மூலம் இந்த மாநிலங்களில் ஏற்கெனவே ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உருவாகியிருந்த நிலையில், அதை த.வெ.க.,வாக மாற்றி அரசியல் விரிவாக்கம் செய்யும் பணி வேகமெடுத்துள்ளது.
கேரளாவில் ஏற்கெனவே பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் அறிமுகக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. உறுப்பினர் சேர்க்கைப் பணிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. த.வெ.க., நிர்வாகிகள் கூறுகையில், “கட்சி தொடங்குவதற்கு முன்பே விஜய் மக்கள் இயக்கம் மூலம் அண்டை மாநிலங்களில் நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இளைஞர்கள் மத்தியில் விஜய் மீது பெரும் ஆதரவு உள்ளது. பூத் கமிட்டி அமைப்புப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன” என்றனர்.
இதையும் படிங்க: அப்பாவுக்கே துரோகம் பண்ணியே! அதான் விஜய் உன்ன கூப்பிடலை! பாமக அன்புமணிக்கு ராமதாஸ் அட்வைஸ்!
தமிழகத் தேர்தல் வெற்றியின் உத்வேகத்தில் தென் மாநிலங்கள் முழுவதும் கட்சியை விரிவுபடுத்த முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் கட்டமாக கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் த.வெ.க., பெயரில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மாநில அளவில் முக்கியப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாலக்காடு மற்றும் திருச்சூர் அறிமுகக் கூட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகு உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.
த.வெ.க.,வின் இந்த விரிவாக்கம் தென் இந்திய அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு தவெகவுக்கே உள்ளது! கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்த ஆதரவுக் குரல்!